விடாமல் அடுத்தடுத்து காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி! ரூ.15 லட்சத்தை இழந்த 51 வயது முதியவர் தற்கொலை!
சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.15 லட்சத்தை இழந்த நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Online Rummy
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கடந்த 10 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும் இதுவரை வழக்கு விசாரணைக்கு வரவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து ராமதாஸ் மற்றும் அன்புமணி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
Online Rummy Money Loss
இந்நிலையில், சென்னை சாலிகிராமம சத்யமூர்த்தி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (51). இவர் தனியார் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணியாற்றி வந்தார். கிருஷ்ணமூர்த்தி ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 3 வருடங்களாக விளையாடி சுமார் ரூ.15 லட்சம் பணத்தை இழந்துள்ளார். இழந்த பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்பதால் கடன் வாங்கி விளையாடியுள்ளார். இதனால், கடன் கழுத்தை நெரித்ததால் மனஉளைச்சலுக்கு ஆளானார்.
Chennai Suicide
இதனிடையே, நேற்று தனது பிள்ளைகளுக்கு இதுவே தனது இறுதி நாள் என குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனே பதறிய அடித்துக்கொண்டு வந்து பார்த்து தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அழுது கதறினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்ததனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.