- Home
- Gallery
- Meera : அட கல்யாண கலை வந்துருச்சே.. சங்கீத் விழாவிற்கு ரெடியான மணமகள் மீரா நந்தன் - Celebration Clicks இதோ!
Meera : அட கல்யாண கலை வந்துருச்சே.. சங்கீத் விழாவிற்கு ரெடியான மணமகள் மீரா நந்தன் - Celebration Clicks இதோ!
Actress Meera Nandhan : கேரளாவில் பிறந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வரும் நடிகை தான் மீரா நந்தன். விரைவில் அவருக்கு திருமணம் நடக்கவுள்ளது.

Meera
கொச்சியில் கடந்த 1990ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி பிறந்த நடிகை தான் மீரா நந்தகுமார். சிறு வயது முதலையே திரைத்துறையின் மீது கொண்ட ஆசையின் காரணமாக, மலையாள மொழியில், சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இவர் தனது பயணத்தை தொடங்கினார்.
actress Meera
அதன் பிறகு கடந்த 2008ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான "முல்லா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தமிழில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான "வால்மீகி" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
Meera nandhan Marriage
அதன் பிறகு மலையாள மொழியிலும் தமிழ் மொழியிலும் ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்து வந்தாலும், ஒரு கட்டத்தில் துபாய் நாட்டிற்கு குடிபெயர்ந்தார். அங்கு பிரபல பண்பலை தொகுப்பாளராகவும் இவர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
Meera nandhan Sangeeth
அதன் பிறகும் அப்பொழுது தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை மீரா நந்தன், இறுதியாக தமிழில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான "நேர் முகம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிப்பு மற்றும் பண்பலை என்று இரண்டு பணிகளையும் அவர் இப்போது செய்து வருகிறார்.
actress Meera nandhan
33 வயது நிரம்பிய மீரா நந்தனுக்கு, விரைவில் திருமணம் நடக்க உள்ள நிலையில், தற்பொழுது அவருடைய சங்கீத் விழா விமர்சையாக நடைபெற உள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.