- Home
- Gallery
- கொஞ்சம் பொறுங்க 2024 பிறக்கட்டும்.. தரமாக சில SUV கார்ஸ் - களமிறக்க காத்திருக்கும் மஹிந்திரா - லிஸ்ட் இதோ!
கொஞ்சம் பொறுங்க 2024 பிறக்கட்டும்.. தரமாக சில SUV கார்ஸ் - களமிறக்க காத்திருக்கும் மஹிந்திரா - லிஸ்ட் இதோ!
Mahindra 2024 Launches : மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் பல ஆண்டுகளாக தனது வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது. அந்த வகையில் 2024ம் ஆண்டில் பல புதிய வாகனங்களை அறிமுகம் செய்யவுள்ளது.

Mahindra XUV 300 Facelift
மஹிந்திரா நிறுவனம் ஏற்கவே வெளியிட்ட பல வாகனங்களின் புதிய வெர்சன்களை தான் அறிமுகம் ஆகப்போகிறது என்றாலும், Thar 5-டோர் மற்றும் XUV e8 போன்ற சில புதிய மடல்களையும் அறிமுகம் செய்யவுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் காணலாம்.
Mahindra XUV 300 Facelift
மஹிந்திரா நிறுவனத்தின் XUV 300 கடந்த 2019ம் ஆண்டில் இருந்து இந்திய சந்தையில் விற்பனையாகி வருகின்றது. ஆனால் அந்த வாகனத்தில் பல Upgradeகள் செய்யப்பட்டு அடுத்த வருடம் XUV 300 Facelift என்ற புதிய மாடலாக 2024ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியாகவுள்ளது. தோராயமாக 8.5 முதல் 15.5 லட்சத்திற்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mahindra XUV 300 ev
மகேந்திர நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரிக் ரக வாகனங்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் பல சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த SUV ரக மஹிந்திரா XUV 300 காரின் எலக்ட்ரிக் வடிவமும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது என்று கூறப்படுகிறது.
Mahindra Thar 5 Door
மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் பெயர் பெற்ற கார்களில் ஒன்று தான் Thar. கடந்த சில காலமாக வளர்ச்சி பணியில் இருந்து வருகின்றது. இந்நிலையில் மாருதி சுஸுகி ஜிம்னி 5-ஐப் போலவே, எஸ்யூவியை விரும்புபவர்கள் மத்தியில் ஒரு புதிய அறிமுகமாக 5 கதவுகள் கொண்ட மஹிந்திரா தார் 5 டோர் விரைவில் வெளியாகவுள்ளது. சுமார் 16 லட்சம் முதல் 24 லட்சம் வரை விலை நிர்ணயயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mahindra XUV e8
மஹிந்திராவின் அடுத்த நெக்ஸ்ட் ஜென் EV தாக்கத்தின் முன்மாதிரி தான் இந்த XUV e8. XUV.e8 ஆனது INGLO ஸ்கேட்போர்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தாலும், இது XUV700 ஐப் போலவே உருவத்தை கொண்டிருக்கும். கிட்டத்தட்ட இது XUV700ன் எலக்ட்ரிக் டெரிவேட்டிவ் என கூறினால் சரியாக இருக்கும். 30 முதல் 35 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.