- Home
- Gallery
- குடும்பத்துடன் வெகேஷன் சென்ற மகேஷ்பாபு.. அவரின் ஆடம்பர Bag-ன் விலை இத்தனை லட்சமா? வைரல் போட்டோ..
குடும்பத்துடன் வெகேஷன் சென்ற மகேஷ்பாபு.. அவரின் ஆடம்பர Bag-ன் விலை இத்தனை லட்சமா? வைரல் போட்டோ..
மகேஷ் பாபு தனது குடும்பத்துடன் வெகேஷன் செல்ல ஹைதராபாத் விமானநிலையம் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mahesh Babu and Rajamouli
மகேஷ் பாபு தற்போது மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்க உள்ள புதிய படத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக SSMB 29 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு தனது குடும்பத்துடன் ஹைதராபாத் விமானநிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Mahesh babu with family at airport
அந்த போட்டோவில் ஹைதராபாத் விமான நிலையத்தில் மகேஷ் பாபு, அவரின் மனைவி நம்ரதா ஷிரோத்கர், மகள் சித்தாரா மற்றும் மகன் கௌதம் ஆகியோர் செல்வதை பார்க்க முடிகிறது. நீண்ட முடி மற்றும் தாடி தோற்றத்தில் மகேஷ்பாபு காணப்படுகிறார், கருப்பு நிற ட்ராக் பேண்ட்டுடன் கூடிய பழுப்பு நிற கோட் மற்றும் டார்க் ஷேட்கள் கொண்ட தொப்பி அணிந்திருந்தார்.
ஆனால் மகேஷ் பாபு தன்னுடன் எடுத்துச் சென்ற ஆடம்பரமான லூயிஸ் உய்ட்டன் கிறிஸ்டோபர் எம்எம் பேக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் மதிப்பு ரூ. 3.92 லட்சம் என்று கூறப்படுகிறது.
மற்றொரு படத்தில், சித்தாராவும் கௌதமும் ஒன்றாக பேசிக்கொண்டே செல்வதை பார்க்க முடிகிறது. ஈடுபட்டுள்ளனர். கௌதம் சாம்பல் நிற பேன்ட், லைட் ப்ளூ டீஷர்ட் அணிந்திருந்தார். சித்தாரா வெள்ளை நிற டி-ஷர்ட், ட்ராக் அணிந்திருந்தார்.
நம்ரதா ஷிரோத்கர் ப்ளூ கலர் கோட்டின் ஃபார்மலாக இருந்தார். இதுதொடர்பான புகைப்படத்தை சித்தாராவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
கௌதம் தனது மேற்படிப்புக்காக நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். எனவே மகேஷ் பாபுவும் அவரது குடும்பத்தினரும் நியூயார்க்கிற்கு சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
Mahesh Babu and Rajamouli
எஸ்.எஸ்.ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு, ஆப்பிரிக்காவில் உள்ள காடுகளின் பின்னணியில் செட் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்துப்புராண கடவுளான ஹனுமனை மையமாக கொண்டு மகேஷ் பாபு கதாப்பாத்திரம் உருவாக்கப்பட உள்ளதாம்.
Mahesh Babu and Rajamouli
தற்போது SSMB 29 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு முதலில் மஹாராஜா என்று பெயரிடப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.