Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. வெளியான குட் நியூஸ்!
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்காக மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

CM Stalin
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Magalir Urimai Thogai
அதில் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 11 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு அவர்களுக்கும் நவம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. நிதியமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
Kalaignar Magalir Urimai Thogai
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி சென்ற இடங்களில் எல்லாம் மகளிர் உரிமை தொகை தங்களுக்கு கிடைக்கவில்லையென என கூறினர். அப்போது சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைக்கும் என உறுதியளித்திருந்தார்.
Tamilnadu Government
இந்த சூழலில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவாதத்தின் போது கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளர்கள், புதிய விண்ணப்பதாரர்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டது. அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு அரசாணையில் குறிப்பிடப் பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தியானது அவர்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.
இதையும் படிங்க: School College Holiday:ஜூலை 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! என்ன காரணம் தெரியுமா? வெளியான அறிவிப்பு!
Magalir Urimai Thogai Scheme
நிராகரிக்கப்பட்ட மேல்முறையீடு விண்ணப்பதாரர்கள் விரும்பினால் நிராகரிக்கப்பட்ட 30 நாள்களுக்குள் இ சேவை மையம் வழியாக மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.