கலைஞர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செஞ்சி இருக்கீங்களா! அப்படின்னா! தமிழக அரசு சொன்ன தகவலை படியுங்கள்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக அக்டோபர் 25ம் தேதி வரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது.
இதில் 60 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள பல பெண்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தகுதியானவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற அக்டோபர் 25ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த விண்ணப்பங்கள் 30 நாட்களில் பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க;- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. இந்த மாதம் தீபாவளிக்கு முன்னதாக கிடைக்குமா? வெளியான முக்கிய தகவல்.!
அதன்படி அக்டோபர் 25ம் தேதி வரை 11 லட்சத்து 85 ஆயிரம் நபர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தகுதியானவர்களுக்கு வரும் 25ம் தேதி முதல் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு அடுத்த மாதம் முதல் பணம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.