இயக்குனர் விஜய் இயக்கத்தில் மாதவன்.. ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு Surprise விசிட் கொடுத்த தலைவர் - வைரல் பிக்ஸ்!
Super Star Rajinikanth : பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் நடிகர் மாதவன் மற்றும் நடிகை கங்கனா ரணாவத் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.
AL VIjay
கடந்த 2007ம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக களமிறங்கியவர் தான் ஏ.எல். விஜய். மதராசபட்டினம், தலைவா மற்றும் தெய்வ திருமகள் போன்ற பல நல்ல படங்களை இயக்கிய ஏ.எல் விஜய் இயக்கத்தில் பிரபல நடிகர் மாதவன் மற்றும் நடிகை கங்கனா ரணாவத் ஆகிய இருவரும் இணைய உள்ளனர்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நயன்தாரா! இது லேடி சூப்பர் ஸ்டாரின் அழகு ரகசியம்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க!
Rajinikanth
இன்று இந்த புதிய படத்திற்கான பூஜை நடைபெற்றது, இந்நிலையில் இந்த பட பூஜைக்கு சர்ப்ரைசாக விசிட் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிகை கங்கனா ராணுவத்திற்கு பூங்கோத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Madhavan
மேலும் படக்குழுவினருடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை கங்கனா, மாதவன் இந்த அற்புத நிகழ்வை மிஸ் செய்துவிட்டார் என்று கூறியுள்ளார். மேலும் தங்கள் படக்குழுவை நேரில் வந்து ஆசிர்வதித்த ரஜினிக்கு நன்றி கூறினார்.