மாரிக்கு ஆப்பு வைக்க தாரா போட்ட பிளான்! நடக்க போவது என்ன? 'மாரி' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த தொடரின் லேட்டஸ்ட் அப்டேட் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் மாரியின் கர்ப்பத்தை கலைக்க பிளான் போட்டு நவராத்திரி விழாவிற்கு ஏற்பாடு செய்து சூர்யாவுக்கு போன் செய்து தாரா மாரி அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வர சொன்ன நிலையில் இன்று எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்து தாரா டீம் காத்துக் கொண்டிருக்கிறது.
ரேடியம் கல்லை சங்கரபாண்டி பக்கத்தில் வைத்து டெமோ பார்க்க கொஞ்ச நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட இதே மாதிரி மாரிக்கும் வயிற்று வலி ஏற்படும் அவளை ஹாஸ்பிடல் கொண்டு போய் சேர்த்தா கர்ப்பம் கலங்கி போச்சுன்னு சொல்லுவாங்க என்று சொல்லி சந்தோஷப்படுகின்றனர்.
அதைத்தொடர்ந்து ஸ்ரீஜா அங்கு வர தாரா நீ எல்லாம் இங்க வரக்கூடாது கர்ப்பத்தை கலைக்க நாங்க பிளான் போட்டுக்கிட்டு இருக்கோம் நீ நம்ப குடும்பத்தோட வாரிசு சம்பந்தப்பட்டிருக்க என சத்தம் போட்டு ஸ்ரீஜாவை அங்கிருந்து அனுப்பி வைக்கிறாள். அதன் பிறகு தாரா, ஸ்ரீஜா மற்றும் ஜாஸ்மின் என மூவரும் தங்க நகைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு காத்திருக்க மாரி சிம்பிளாக வீட்டுக்கு வருவதை பார்த்து ஜாஸ்மின் ஒரு பொட்டு நகை இல்லாம வந்திருக்க என்று அவமானப்படுத்த முயற்சி செய்கிறாள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
உடனே மாரி இதெல்லாம் பெருசு கிடையாது, அந்த அம்மனோட கழுத்துல இருக்க அந்த தாலிக்கு இணையா எதுவும் வராது என சொல்ல தாரா என்ன மாதிரி இப்படி எல்லாம் சொல்ற என பிரச்சனையை பெரிதாக்க பிளான் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை தொடரை பார்க்க தவறாதீர்கள்.\Rashmika: இப்படி ஒரு விஷயத்தை கற்பனை செய்து கூட செய்யமுடியவில்லை! வேதனையோடு ராஷ்மிகா போட்ட பதிவு!