- Home
- Gallery
- நார் நாரா கிழிச்ச லக்னோ உரிமையாளர் – வீட்டிற்கு அழைத்து கேஎல் ராகுலுக்கு ஸ்பெஷல் விருந்து கொடுத்து சமாதானம்!
நார் நாரா கிழிச்ச லக்னோ உரிமையாளர் – வீட்டிற்கு அழைத்து கேஎல் ராகுலுக்கு ஸ்பெஷல் விருந்து கொடுத்து சமாதானம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் லக்னோ உரிமையாளர் சஞ்சய் கோயன்கா மைதானத்தில் வைத்து கேஎல் ராகுலை சரமாரியாக வெளுத்து வாங்கிய வீடியோ காட்சிகள் வைரலானது.

KL Rahul and Sanjiv Goenka
ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 57ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன் படி முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.
KL Rahul_Sanjiv Goenka
பின்னர் எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் இம்பேக்ட் பிளேயராக வந்த அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
Sanjiv Goenk-KL Rahul
இந்தப் போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியானது முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது வெளியேறியுள்ளது. இந்த நிலையில் இந்தப் போட்டிக்கு பிறகு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா, கேப்டன் கேஎல் ராகுலிடம் ஆக்ரோஷமாக பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, பதிலுக்கு கேஎல் ராகுல் ஒன்றுமே பேச முடியாத நிலையில் நின்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
KL Rahul and Sanjiv Goenka
இதன் காரணமாக லக்னோ உரிமையாளர் சஞ்சய் கோயன்கா விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில் இன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் 64ஆவது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி விளையாடுகிறது.
KL Rahul and Sanjiv Goenka
இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில் தான், இந்தப் போட்டிக்கு முன்னதாக நேற்று இரவு லக்னோ உரிமையாளர் சஞ்சய் கோயன்கா, கேஎல் ராகுலுக்கு ஸ்பெஷலாக இரவு உணவு கொடுத்துள்ளார். கோயன்காவின் வீட்டிற்கு ராகுலை அழைத்து விருந்து கொடுத்து சமசரம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.