Commercial LPG Gas Price: கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. இந்த முறை எவ்வளவு தெரியுமா?
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ 101.50 உயர்ந்து ரூ.1999ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் ரூ.203 உயர்ந்தது. இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1,999.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த 2 மாதங்களாக உயர்ந்து வருகிறது.
ஆனால் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ரூ.918.50க்கு விற்பனையாகிறது.