- Home
- Gallery
- ரூ.15,000 கோடி.. முகேஷ் - நீதா அம்பானியின் ஆடம்பர பங்களா ஆண்டிலியா.. பலருக்கும் தெரியாத தகவல்கள்..
ரூ.15,000 கோடி.. முகேஷ் - நீதா அம்பானியின் ஆடம்பர பங்களா ஆண்டிலியா.. பலருக்கும் தெரியாத தகவல்கள்..
முகேஷ் - நீதா அம்பானியின் ஆடம்பர வீடான ஆண்டிலியா குறித்து பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி, ஆசியாவின் பெரும் பணக்காரரராகவும் திகழ்கிறார். உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் அம்பானியின் சொத்து மதிப்பு 95.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 7,93,826 கோடி) என்று கூறப்படுகிறது.
பலர் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத வாழ்க்கையை அம்பானியும் அவரின் குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். மும்பையின் உயர்மட்ட அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஆண்டிலியா என்ற ஆடம்பர பங்களாவில் அம்பானி குடும்பம் வசித்து வருகிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள புராண தீவின் பெயரான ஆண்டிலியா என்ற பெயரை தனது பங்களாவுக்கு வைத்தார் நீதா அம்பானி.
அம்பானிகள் வசிக்கும் ஆண்டிலியா ஒரு வீடு மட்டுமல்ல, ஆடம்பரத்தின் சின்னமாகவும் உள்ளது. இங்கு முகேஷ் அம்பானி, அவரது தாய் கோகிலா பென், மனைவி நீதா, மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த், மருமகள் ஸ்லோகா மற்றும் பேரன் பிருத்வி ஆகியோர் வசித்து வருகின்றனர்.
ஆண்டிலியா குறித்து பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சுமார் 2.2 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள இந்த பங்களா, உலகளவில் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடாக உள்ளது.
ஆன்டிலியாவில் மூன்று ஹெலிபேடுகள், 168 கார்களுக்கான இடம், 50 இருக்கைகள் கொண்ட தியேட்டர், தோட்டங்கள், யோகா ஸ்டுடியோ, நீச்சல்குளம், ஸ்பா மற்றும் கோயில் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் இங்கு கார்களை சர்வீஸ் செய்ய 7வது மாடியில் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிலியாவின் கட்டிடக்கலை வடிவமைப்பு தாமரை மற்றும் சூரியனால் ஈர்க்கப்பட்டது.
அம்பானி வீட்டில் பல்வேறு வகையான செடிகள் மற்றும் மரங்கள் கொண்ட பெரிய தொங்கும் தோட்டம் உள்ளது; இருப்பினும், இந்த தோட்டத்தை பொதுமக்களின் பார்க்க முடியாது.
Antilia
உலகில் அதிக செலவில் கட்டபப்ட்ட கட்டிடமும் ஆண்டிலியா தான். உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் (1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவானது. ஆன்டிலியாவை கட்டி முடிக்க 2 பில்லியன் டாலர்கள் செலவானதாக கூறப்படுகிறது.
4,00,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட ஆன்டிலியா, பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த குடியிருப்பு சொத்து ஆகும்.27 மாடிகளைக் கொண்ட ஆண்டிலியாவில் 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் குழு உள்ளது, இந்த குழுவினர் அதன் அழகையும் கம்பீரத்தையும் பராமரித்து வருகின்றனர்.
ஆண்டிலியாவில் பார்க்கிங்கிற்காக 6 தளங்கள், மும்பை வெப்பத்தை வெல்ல ஒரு பனி அறை, பல நீச்சல் குளங்கள், நடனம் மற்றும் யோகா ஸ்டுடியோ மற்றும் 9 சூப்பர்-பாஸ்ட் லிஃப்ட் என பல ஆடம்பர வசதிகள் உள்ளன.
இந்த பிரம்மாண்ட வீடு இரண்டு அமெரிக்க நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டது, 2004 இல் தொடங்கப்பட்ட இதன் கட்டுமான பணி 2010 இல் முடிவடைந்தது. அம்பானி குடும்பம் 2011 ஆம் ஆண்டு இந்த வீட்டிற்கு குடிபெயர்ந்தது. இந்த ஆடம்பர வீட்டின் கட்டுமானத்துக்கு ரூ.15000 கோடி செலவானதாக கூறப்படுகிறது. எனவே உலகிலெயே அதிக செலவில் கட்டப்பட்ட கட்டிடம் இதுதான்.