MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தமிழ்நாட்டில் 100 கோடி வசூல்... மற்ற மாநிலங்களில் லியோ பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? சூப்பரா? சுமாரா? முழு விவரம்

தமிழ்நாட்டில் 100 கோடி வசூல்... மற்ற மாநிலங்களில் லியோ பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? சூப்பரா? சுமாரா? முழு விவரம்

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் லியோ படத்தின் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநில பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 23 2023, 04:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Leo

Leo

நடிகர் விஜய் நடிப்பில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்த அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. படத்தின் முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி இல்லை என பெரும்பாலான விமர்சனங்கள் வந்தன. இதனால் லியோ படத்தின் வசூல் பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

24
Leo collection

Leo collection

ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. இப்படத்திற்கு விமர்சகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும், ரசிகர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் இப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளதால், லியோ படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. முதல் நாளில் ரூ.148 கோடி வசூலை வாரிக்குவித்த லியோ திரைப்படம், நான்கு நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.400 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Leo box office

Leo box office

குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. அதேபோல் லியோ படத்துக்கு மற்ற மாநிலங்களிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கு பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் அங்கு ரூ.35 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. அதேபோல் கேரளாவில் 4 நாட்களிலேயே ரூ.31 கோடி வசூலித்து தன்னுடைய பாக்ஸ் ஆபிஸ் பலத்தை நிரூபித்துள்ளார் விஜய்.

44
Lokesh Kanagaraj, vijay

Lokesh Kanagaraj, vijay

கர்நாடகாவில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ஷிவ ராஜ்குமாரின் கோஸ்ட் படத்துக்கு போட்டியாக லியோ படம் ரிலீஸ் ஆனது. அங்கும் லியோ ரூ.30 கோடி கலெக்‌ஷன் அள்ளி வசூல் வேட்டை நடத்தி உள்ளது. வட மாநிலங்களில் மல்டிபிளக்ஸ் தவிர்த்து ரிலீஸ் செய்யப்பட்டாலும் லியோ படம் ரூ.10 கோடி வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. இதேபோன்று மல்டிபிளக்ஸ் தவிர்த்து ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மொத்தமாகவே ரூ.7.25 கோடி மட்டுமே வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... இது பிக்பாஸ் வீடா இல்ல லவ்வர்ஸ் பார்க்கா? மணி - ரவீனாவை தொடர்ந்து ரொமான்ஸை தொடங்கிய மற்றுமொரு காதல் ஜோடி..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
லோகேஷ் கனகராஜ்
திரிஷா
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved