அண்ணாச்சி கூட ஐட்டம் டான்ஸ் ஆடிய ராய் லட்சுமியா இது? பிகினி பேபியின் கிக்கான போட்டோஸ் இதோ
Raai laxmi bikini photos : தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ராய் லட்சுமியின் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.
Raai laxmi
பெங்களூரை சேர்ந்தவர் ராய் லட்சுமி. இவர் கடந்த 2005-ம் ஆண்டு வெளிவந்த கற்க கசடற என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தில் நடிகர் விக்ராந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து பார்த்திபன் இயக்கிய காமெடி திரைப்படமான குண்டக்க மண்டக்க, பேரரசுவின் ஆக்ஷன் திரைப்படமான தர்மபுரி ஆகிய திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.
Actress Raai laxmi
இவருக்கு தமிழில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது தாம் தூம் தான். ஜீவா இயக்கிய இப்படத்தில் ஜெயம் ரவியின் வக்கீலாக நடித்திருந்தார். அப்படத்திற்காக அவருக்கு முதன்முறையாக பிலிம்பேர் விருதும் கிடைத்தது. பின்னர் முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை 2 என கடந்த 2009-ம் ஆண்டில் மட்டும் ராய் லட்சுமி நடிப்பில் மூன்று படங்கள் வந்தன. இதையடுத்து லாரன்ஸுக்கு ஜோடியாக இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் நடித்தார் ராய் லட்சுமி.
இதையும் படியுங்கள்... ரஜினிக்கு வில்லனா நடிச்சா சும்மா விடுவாங்களா! வீட்ட விட்டு வெளிய போக முடியலையாம்- ‘ஜெயிலர்’ விநாயகன் ஓபன் டாக்
Raai laxmi in Bikini
ஹீரோயின் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த ராய் லட்சுமியை தன்னுடைய மங்காத்தா படத்தில் வில்லியாக நடிக்க வைத்து அழகு பார்த்தார் வெங்கட் பிரபு. அவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வரும் ராய் லட்சுமி, கடைசியாக தமிழில் தி லெஜண்ட் திரைப்படத்தில் வாடிவாசல் என்கிற பாடலுக்கு சரவணன் அண்ணாச்சியுடன் ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார்.
Raai laxmi Bikini Photos
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது கருப்பு நிற பிகினி உடை அணிந்து டூமச் கிளாமராக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன வரவர ஆடை குறைஞ்சுகிட்டே போகுது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பூக்களே சற்று ஓய்வெடுங்கள்... அவள் வந்துவிட்டாள்! திவ்யா ஸ்பந்தனாவின் ஃபாரின் டிரிப் போட்டோஸ் இதோ