"நம்பிக்கையோடு தான் அங்க போனாங்க.. ஆனா அவளோட கடைசி நிமிடம்" - கண்கலங்கிய பாடகி பவதாரிணியின் தாய் மாமா!
Bhavatharini : இசைஞானி இளையராஜாவின் மகளும், பிரபல படகியுமான பவதாரிணி இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி இலங்கையில் காலமானார் அவருக்கு வயது 47.
ilayaraja
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி கடந்த 1976ம் ஆண்டு பிறந்த நிலையில், தனது பன்னிரண்டாவது வயது முதல் திரைத்துறையில் பாடகியாக களம் இறங்கினார். தனது தந்தை இளையராஜா மற்றும் தம்பி யுவன் சங்கர் ராஜா இசையில் நான் அதிக அளவிலான பாடல்களை இவர் பாடியிருக்கிறார். இவர் குரலில் வெளியான "மஸ்தானா மஸ்தானா" என்ற பாடலுக்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடப்பட்டது.
முதல்ல பாலிவுட்.. இப்போ மோலிவுட்.. SK23 - மலையாளத்தில் இருந்து மாஸ் நடிகரை களமிறக்கும் AR முருகதாஸ்!
vilasini
புற்றுநோய் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி அவர் கொழும்பில் காலமான நிலையில், அவருடைய இறப்பு குறித்து மனம் திறந்து இருக்கிறார் அவருடைய தாய் மாமன் மூர்த்தி. இவர் பிரபல பாடகி மற்றும் சீரியல் நடிகை விலாசினியின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் பவதாரிணிக்கு இப்படி ஒரு நோய் இருப்பதே, நெருங்கிய உறவினர்களுக்கு கூட தெரியாது என்று கூறியுள்ளார் மூர்த்தி.
singer bhavatharini
என்னுடைய மாமா இளையராஜாவும் சரி, மாப்பிள்ளை யுவன் சங்கர் ராஜாவும் சரி, தங்களுடைய பணியில் மிக மிக பிஸியாக இருந்த காரணத்தினால், பவதாரணையின் உடல் நலம் குறித்து அவர்கள் கேட்டறிய பெரிய அளவில் நேரமில்லை. பவதாரிணியும் தன்னுடைய உடல் நிலையை கவனிக்காமல் விட்டுவிட்டால். உண்மையிலேயே என்னுடைய அக்கா இருந்திருந்தால் நிச்சயம் பவதாரணிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று கண்கலங்கி பேசியுள்ளார் மூர்த்தி.
bhavatharini husband
அவளுடைய புற்றுநோய் 4ம் கட்டம் சென்ற பிறகு தான் எங்களுக்கு அது குறித்து தெரிய வந்தது. அப்போது பவதாரணியை நேரில் சந்தித்து அவளுக்கு ஆறுதல் கூறினேன். கதறி அழுத அவளுடைய கணவருக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது என்று வழி தெரியாமல் இருந்தேன். அப்பொழுதுதான் ஏதாவது ஒரு வழியில் இதை குணப்படுத்தி விட முடியாதா? என்ற நம்பிக்கையோடு பவதா இலங்கை சென்றால். ஆனால் அவள் உடல் மட்டுமே எங்களை தேடி வந்தது.