- Home
- Gallery
- படத்துக்கு விளம்பரமா? அப்பாவிடம் எழுபட்ட கேள்விகள்! 'லால் சலாம்' பிரஸ் மீட்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆதங்கம்!
படத்துக்கு விளம்பரமா? அப்பாவிடம் எழுபட்ட கேள்விகள்! 'லால் சலாம்' பிரஸ் மீட்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆதங்கம்!
லால் சலாம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விமான நிலையத்தில் தன்னுடைய தந்தையிடம் எழுபட்ட கேள்விகளுக்கு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'லால் சலாம்' திரைப்படம், பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி மிக பிரமாண்டமாக வெளியாக உள்ளது. ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகனாக நடிக்க, செந்தில், தம்பி ராமையா, தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில்... இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் இயக்குனர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது... "படம் குறித்து நிறைய பேச வேண்டும், உட்கார சேர் இருந்தால் நல்லா இருக்கும். நல்லா இருக்கு ஸ்டைலா இருக்குனு ஷூ போட்டுட்டு வந்துட்டேன் ரொம்ப நேரம் நிக்க முடியல.. என மிகவும் சாதாரணமாக பேச துவங்கினார்.
50 கிளைகள்! 100 கோடி வருமானம்! அப்பா இறப்பதற்கு முன் இதை சொன்னார்! சாதித்த எம்.எஸ்.விஸ்வநாதன் மகள்!
"விளையாட்டு வினையாக முடிந்தால் என்னவாகும்? என்பது தான் 'லால் சலாம்' படத்தின் கதை. கஷ்டப்பட்டு கிடைப்பது தான் நிலைக்கும். விளையாட்டில் நீ பெருசா? நான் பெருசா? என வரும் போது தான் போட்டி உருவாகுது. அதுவே பிஸ்னஸாக மாறுது. அந்த போட்டிக்குள் அரசியல் வரும் போது வெறியாக மாறுது. அது தான் லால் சலாம் படத்தின் கதை.
கதை அரசியல் பேசுகிறதா என கேட்டால், கண்டிப்பா சின்ன அரசியல் பேசுகிறது. அரசியல் இல்லாமல் யாரும் இல்லை எதுவும் இல்லை. அதை நாம் பார்க்கும் விதத்தில் தான் உள்ளது. இதை தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி! பொதுவாக படம் பார்க்காமல் ரெட் ஜெயண்ட் லேபிள் கொடுக்க மாட்டார். நான் இந்த படத்தின் சில காட்சிகளை மட்டும் தான் உதயநிதிக்கு காட்டினேன். அதை பார்த்த உடனே ரெட் ஜெயண்ட் இந்த படத்தை வழங்கும் என ஒப்புக்கொண்டார். அதற்காக நன்றி.
Linga and Yatra
நான் பாடல் வெளியீட்டு விழாவில் என்ன பேசப்போகிறேன் என்பது அப்பாவிற்கு தெரியாது. விமான நிலையத்தில் கூட நான் பேசியதை பார்த்து படத்திற்கு விளம்பரமா என அவரிடம் கேட்டார்கள். அதற்கு சின்ன விளக்கமளிக்க விரும்புகிறேன் .என் மூலமாகவோ அல்லது Strategy செய்தோ சூப்பர் ஸ்டார் படம் ஓடணும்னு இல்லை! எந்த அரசியலும் இல்லாமல் ஜெயிலர் படம் எப்படி ஓடியதுனு என எல்லாருக்கும் தெரியும்... அவரிடம் இப்படி ஒரு கேள்வி எழுப்பியது எனக்கு பெரும் வருத்தத்தை கொடுத்தது. எனக்கும், என்னுடைய சகோதரிக்கும் கருத்துருமை கொடுத்துள்ளார்.