- Home
- Gallery
- Nayanthara : படங்கள் அடுத்தடுத்து பிளாப் ஆனாலும் சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திய நயன்- அதுக்குன்னு இவ்வளவா?
Nayanthara : படங்கள் அடுத்தடுத்து பிளாப் ஆனாலும் சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திய நயன்- அதுக்குன்னு இவ்வளவா?
கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, தற்போது தன் சம்பளத்தை மளமளவென உயர்த்தி உள்ளதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Nayanthara
சினிமாவில் ஹீரோயின்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஹீரோயின்களாக நிலைத்திருப்பது அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் கோலிவுட்டில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்களுடைய அழகாலும், நடிப்பாலும் கோலோச்சி வருபவர்கள் திரிஷா மற்றும் நயன்தாரா. சமகால நடிகைகளான இவர்கள் இருவரும் தற்போது வரை பிசியான ஹீரோயின்களாக வலம் வருகின்றனர். குறிப்பாக திரிஷா தற்போது டாப் பார்மில் இருக்கிறார்.

நடிகை திரிஷா கைவசம் அஜித்தின் விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப், தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக விஸ்வம்பரா, மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ராம் என தென்னிந்திய மொழிகளில் செம்ம பிசியாக நடித்து வருகிறார். மறுபுறம் நயன்தாரா நடிப்பில் தற்போது மண்ணாங்கட்டி என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இதுதவிர துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ் சிவனின் எல்.ஐ.சி போன்ற படங்களும் நயனின் லைன் அப்பில் உள்ளன.
இதையும் படியுங்கள்... Romeo: 'ரோமியோ' படம் பார்த்த பின்.. முழு திருப்தியுடனும் வெளியேறுவார்கள் ரசிகர்கள்! இயக்குநர் நம்பிக்கை !
இவர்கள் இருவரில் சக்சஸ்புல் நாயகியாக வலம் வருவது திரிஷா தான். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன், லியோ ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அதேபோல் நயன்தாராவுக்கு இந்தியில் ஜவான் படம் ஹிட் ஆனாலும், கோலிவுட்டில் அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளிவந்த இறைவன், அன்னபூரணி ஆகிய படங்கள் அட்டர் பிளாப் ஆகின.
Nayanthara salary
பொதுவாக படங்கள் ஹிட் ஆனதும் நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவது வழக்கம், அந்த வகையில் நடிகை திரிஷா லியோ படத்தின் வெற்றிக்கு பின் தன் சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தி இருக்கிறார். ஆனால் நயன்தாரா நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்திருந்தாலும் அவரும் சம்பளத்தை உயர்த்தி இருப்பது தயாரிப்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தற்போது செந்தில் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகி உள்ள படத்துக்கு நடிகை நயன்தாரா ரூ.12 கோடி சம்பளம் கேட்டுள்ளது தான் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... Sanchana : மாடர்ன் உடையில்.. சுட்டெரிக்கும் வெப்பத்தில் கூல் போஸ் - அசத்தும் போர் பட நாயகி சஞ்சனா நடராஜன்!