- Home
- Gallery
- நானும் அவரும்.. உயிரும் உலகமும்.. குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - நயனின் ஃபேமிலி கிளிக்ஸ் வைரல்!
நானும் அவரும்.. உயிரும் உலகமும்.. குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - நயனின் ஃபேமிலி கிளிக்ஸ் வைரல்!
Nayanthara Christmas Celebration : நேற்று உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திரைத்துறையினர் பலரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.

Nayanthara with her mother
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் மட்டுமல்லாமல் ஒரு தொழிலதிபராக தனது முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையை நேற்று தனது குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் பிரபல நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அதேபோல டிசம்பர் 24ஆம் தேதி தனது 9 ஸ்கின்ஸ் நிறுவனத்தின் சில பொருட்களையும் அவர் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Vignesh Shivan
கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை மணந்து கொண்ட பிரபல நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் உயிர் மற்றும் உலகம் என்கின்ற இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தனது தாய் மற்றும் கணவர் விக்கி மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகிய நால்வருடன் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகை அவர் கொண்டாடியுள்ளார்.
Uyir and Ulagam
இறுதியாக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான "அன்னபூரணி" என்கின்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இந்த திரைப்படம் அவருடைய 75வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத அன்னபூரணி திரைப்படம் தற்பொழுது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த 2023 ஆம் ஆண்டில் நயன்தாரா தனது முதல் ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Christmas Celebration
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் உருவாகும் "மண்ணாங்கட்டி" என்கின்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. அதேபோல மாதவன் நடிப்பில் உருவாகி வரும் "டெஸ்ட்" என்ற திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா தற்போது பிஸியாக நடித்த வருகின்றார்.