- Home
- Gallery
- நயன்தாராலாம் இல்ல... அவருக்கு முன்னரே சொந்தமாக பிரைவேட் ஜெட் வாங்கிய முதல் தமிழ் நடிகை யார் தெரியுமா?
நயன்தாராலாம் இல்ல... அவருக்கு முன்னரே சொந்தமாக பிரைவேட் ஜெட் வாங்கிய முதல் தமிழ் நடிகை யார் தெரியுமா?
சொந்தமாக தனி விமானம் வைத்திருந்த முதல் தமிழ் நடிகை யார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

KR Vijaya
சினிமா நடிகர், நடிகைகள் கோடிகளில் சம்பளம் வாங்குவதால் அவர்கள் பெரும்பாலும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையே விரும்புகின்றனர். அந்த வகையில் சொகுசு கார்கள், பைக்குகள் வைத்திருப்பதை தாண்டி, தற்போது சினிமா பிரபலங்கள் தனி விமானம் வைத்திருக்கின்றனர். தற்போது லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நயன்தாரா தொடங்கி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என தமிழ் திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் தனி விமானம் வைத்திருக்கின்றனர்.
Actress kr vijaya
இவர்களுக்கு முன்னதாகவே ஒரு தமிழ் நடிகை பிரைவேட் ஜெட் வைத்திருந்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த நடிகை வேறுயாருமில்லை நடிகை கே.ஆர்.விஜயா தான். அவர் தான் சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்திருந்த முதல் தமிழ் நடிகை ஆவார். 1970களில் டாப் ஹீரோயினாக கொடிகட்டிப்பறந்தவர் கே.ஆர்.விஜயா. அந்த காலகட்டத்தில் ஆண்டுக்கு இவர் நடிப்பில் 10 படங்களாவது வெளியாகிவிடுமாம் அந்த அளவுக்கு பிசியான நடிகையாக வலம் வந்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... "நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு" மாஸ் படங்களுடன் கம் பேக் கொடுக்கும் SAM!
KR Vijaya owns Private jet
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய் சங்கர் ஆகியோரின் படங்களில் நடிக்க இயக்குனர்களின் பர்ஸ்ட் சாய்ஸாக இருந்தவர் கே.ஆர்.விஜயா தான். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கே.ஆர்.விஜயா, அந்த காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகையாகவும் திகழ்ந்து வந்துள்ளார்.
kr vijaya husband
நடிகை கே.ஆர்.விஜயா தான் சொந்தமாக பிரைவேட் ஜெட் வாங்கிய முதல் நடிகையாம். அப்போதே ஷுட்டிங்கிற்கு தனி விமானத்தில் வந்து கெத்தாக வாழ்ந்து வந்துள்ளார் கே.ஆர்.விஜயா. இவரது கணவர் மிகப்பெரிய தொழிலதிபராம். அவருக்கு சொந்தமாக கப்பல்கள் மற்றும் ஹோட்டல்களும் உள்ளன. தற்போது நடிகை கே.ஆர் விஜயாவுக்கு 75 வயது ஆகிறது. இந்த வயதிலும் நடிப்பதை கைவிடாத அவர் அண்மையில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மாமியார்னா இப்படில இருக்கனும்.. ஆல்யா மானசாவை சிலிர்க்க வைத்த அவர் அத்தை!