குறைந்தது தக்காளி, பீட்ரூட் விலை.! கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?
சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகளின் விலை சரிவு! வெங்காயம், தக்காளி உள்ளிட்ட பல காய்கறிகள் குறைந்த விலையில் கிடைப்பதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.
காய்கறி விலை என்ன.?
சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகளின் விலை உயர்வால் பொதுமக்கள் குறைவான அளவிலையே காய்கறிகளை வாங்கினர். இந்த நிலையில் இல்லத்தரசிகளுக்கு சற்று மகிழ்ச்சி தரும் வகையில் விற்பனை விலை குறைந்துள்ளது. அந்த வகையில், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சுரைக்காய் விலை என்ன.?
நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
முருங்கைக்காய் விலை என்ன.?
காலிஃப்ளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பௌர்ணமி; திருவண்ணாமலைக்கு சிறப்பு அரசு பேருந்துகள் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு
வெண்டைக்காய் விலை நிலவரம்
இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 160 க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது