படக்குனு பாவாடை தாவணிக்கு மாறிட்டாங்க - ட்ரெடிஷனல் உடையில் யாஷிகா ஆனந்த்!
Yashika Aannand : புதுடெல்லியில் பிறந்து, கோலிவுட் திரைப்படங்களில் மட்டுமே நடித்து புகழ்பெற்ற நடிகை தான் யாஷிகா ஆனந்த், அவருக்கு வயது 24.

yashika aannand photos
தனது 17வது வயது முதல் கலைத்துறையில் பயணித்து வரும் யாஷிகா ஆனந்த், கடந்த 2016ம் ஆண்டு வெளியான "கவலை வேண்டாம்" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
மாடர்ன் மேஸ்ட்ரோ தயாரிப்பில் ரியோ ராஜ் - புது காம்பினேஷனில் உருவாகும் "Sweet Heart"!
yashika aannand
தொடர்ச்சியாக கோலிவுட் உலகில் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களை ஏற்று மட்டுமே யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார். இன்றளவும் அவருடைய நடிப்பை எடுத்துரைக்கும் அளவிற்கு கனமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை என்றே விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Actress yashika aannand
இறுதியாக தமிழில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான இயக்குனர் செல்வத்தின் "படிக்காத பக்கங்கள்" என்கின்ற திரைப்படத்தில், முன்னணி கதாபாத்திரம் ஏற்று யாஷிகா ஆனந்த் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
yahsika
தொடர்ச்சியாக தமிழில் "இவன்தான் உத்தமன்", "ராஜ பீமா", "சல்பர்" மற்றும் "சிறுத்தை சிவா" உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகை யாஷிகா ஆனந்த் தற்பொழுது நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
"லவ் யூ பாலா அண்ணா".. "வணங்கான்" படம் பார்த்து ரிவியூ சொன்ன பிரபலம் - படம் எப்படி இருக்கு?