துயரத்தில் மூழ்கிய வயநாடு.. போட்டிபோட்டு உதவிக்கரம் நீட்டிய கோலிவுட் & மோலிவுட் நட்சத்திரங்கள் - ஒரு பார்வை!
Celebrities for Wayanad : கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி இயற்கை எழில் கொஞ்சும் வயநாடு, தற்பொழுது மிகப்பெரிய துயரத்தில் மூழ்கி இருக்கிறது.
Dulquer Salman
இருப்பினும் கேரளாவும், வயநாடு மக்களும் மீண்டு வருவதற்காக திரைத்துறை பிரபலங்கள் பலரும் நிதி உதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி 20 லட்சம் ரூபாயை நிதியாக கொடுத்துள்ளார். அவருடைய மகன் துல்கர் சல்மான் 15 லட்சம் கொடுத்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவால் கதறும் கேரள மக்களுக்கு ஓடி வந்து உதவிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்!
Kamal
கேரளாவின் துயரைக் கண்டு தான் கண் கலங்கி நிற்பதாக கூறிய உலக நாயகன் கமல்ஹாசன், வயநாடு மக்களுக்கு உதவ சுமார் 20 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்திருக்கிறார்.
vikram
தமிழ் சினிமாவின் மிக மூத்த நடிகரும், மலையாள திரையுலக ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகருமான விக்ரம், வயநாடு மக்களுக்காக சுமார் 20 லட்சம் ரூபாயை நிதியாக கொடுத்திருக்கிறார்.
jyothika
நடிகை ஜோதிகா, நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய மூவரும் இணைந்து சுமார் 50 லட்சம் ரூபாயை வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரண நிதியாக கொடுத்துள்ளனர்.
rashmika
நேஷனல் க்ரஷ் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தானா, கேரளாவின் துயர் நீக்க 10 லட்சம் ரூபாயை நிதியாக கொடுத்திருக்கிறார்.
Nazriya
அதேபோல கேரள உலகை சேர்ந்த நட்சத்திர தம்பதிகளான நஸ்ரியா மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் இணைந்து சுமார் 25 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக கொடுத்துள்ளனர்.
ரூ.1,500 கோடி சொத்து தான் காரணமா? 60 வயது நடிகருக்கு 4வது மனைவியான 44 வயது நடிகை