கவர்ச்சி உடையில்.. ஸ்டைலிஷ் லுக்.. கிளாமரில் ஆளை மயக்கும் ரிது வர்மா - ஹாட் கிளிக்ஸ்!
Ritu Varma : ஹைதராபாத்தில் பிறந்து தெலுங்கு மொழி திரைப்படங்கள் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய நடிகை தான் ரிது வர்மா, அவருக்கு வயது 34.
Actress Ritu Varma
ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்து அங்கேயே தனது பட்டப் படிப்பை முடித்த நடிகை ரிது வர்மா, இளம் வயதிலேயே மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கினார். அவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக "Miss Hyderabad Beauty Pageant" போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார்.
திரையரங்குகளை கலக்கிய கல்கி 2898 AD.. OTTயில் எப்போ ரிலீஸ்? அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ!
Actress Ritu
கடந்த 2013ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் கலை உலகில் அறிமுகமான ரிது வர்மா, தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான தனுஷின் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் கோலிவுட் உலகில் கால் பதித்தார்.
Ritu Varma
அதன் பிறகு கடந்த 2020ம் ஆண்டு பிரபல இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்கின்ற திரைப்படம், ரிது வர்மாவிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு தமிழில் "புத்தம் புது காலை" என்கின்ற திரைப்படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
Actress Ritu varma
இறுதியாக தமிழில் "மார்க் ஆண்டனி" திரைப்படத்தில் நடித்திருந்த ரிது வர்மா, தற்பொழுது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் என்று நடித்திருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இணைய தொடர்களிலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
"டேய் ட்ரைலர் செம சூப்பர் டா" விஜய் மற்றும் GOAT படக்குழுவிற்கு வாழ்த்து சொன்ன தல அஜித்!