வயதோ 45.. ஆனால் இப்பவும் சூப்பர் Fit & Hotஆக இருக்கும் நடிகை ஜோதிகா - அதற்கு காரணம் என்ன தெரியுமா?
Actress Jyothika : பாலிவுட் படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ஜோதிகா, கடந்த 1999ம் வெளியான தல அஜித்தின் வாலி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
Jyothika and Suriya
நட்சத்திர நாயகியாக வலம் வந்த நடிகை ஜோதிகா, தனது சக நடிகரான சூர்யாவை கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்துவரும் ஜோதிகா தற்போது சைத்தான் என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். அதேபோல வயது 45 ஆகிவிட்டது என்றாலும், இப்பொதும் இளமையாக இருக்கின்றார் அவர்.
ரஜினியின் மகள்கள் திருப்பதியில் சாமி தரிசனம்.. வைரல் போட்டோஸ்..
Actress Jyothika
முன்னதாக ஜோதிகா கொஞ்சம் உடல் பருமனாக Chubby நாயகியை வலம்வந்தார், ஆனால் அவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்க்கும்போது அவருடைய தோற்றம் முழுவதும் மாறி மிகவும் இளமையாக தோற்றமளிக்கிறார். இதற்காக தனது உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளில் மாற்றங்களைச் செய்துள்ளார் அவர்.
Jyothika fitness
ஜோதிகா இப்பொது முழுக்க முழுக்க ஃபிட்னஸ் ஃப்ரீக் என்று சொல்லலாம். அவர் தினமும் ஜிம்மிற்கு செல்கின்றார். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்மில் தினமும் கடுமையாக உழைக்கிறார். ஒரு நாள் கூட தவறாமல் ஜிம்மிற்கு செல்கிறார் ஜோதிகா. அவர் பெரும்பாலும் ஜிம்மில் உடல் வலிமைக்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார்.
Actress Joe
உடல் எடையைக் குறைக்கும் பயிற்சிகளையும் செய்து வருகிறார். இதனால் தான் அவருக்கு தற்போது உடல் எடை மிகவும் குறைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற விரும்புகிறார்கள். ஆனால் சில காலம் உடற்பயிற்சி செய்துவிட்டு பாதியில் நிறுத்துகிறார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு எடை கூடுகிறது.