- Home
- Gallery
- ரிலையன்ஸ் குழுமத்தில் அதிக பங்குகளை வைத்திருப்பது யார்? ஆனா முகேஷ், நீதா, ஆகாஷ், இஷா, ஆனந்த் இல்ல..
ரிலையன்ஸ் குழுமத்தில் அதிக பங்குகளை வைத்திருப்பது யார்? ஆனா முகேஷ், நீதா, ஆகாஷ், இஷா, ஆனந்த் இல்ல..
அம்பானி குடும்த்தின் மொத்த சொத்து மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் அதிகபட்ச பங்குகளை வைத்திருப்பவர் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ambani family
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் செண்டரில் கடந்த 12-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதில் அம்பானி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், பாலிவுட் பிரபலங்கள், தென்னிந்திய பிரபலங்கள், சர்வதேச பிரபலங்கள், விளையாட்டு அரசியல் பிரபலங்கள், சர்வதேச பிரபலங்கள் என பல விஐபிக்கள், விவிஐபிக்கள் கலந்து கொண்டனர்.
anant radhika
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது மகனின் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினார். இதனால் ஆனந்த் - ராதிகா திருமணம் இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது.
anant radhika
அம்பானி வீட்டு திருமணம் தொடர்பான பல்வேறு போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. மேலும் அம்பானி வீட்டு திருமண குறித்த பல்வேறு தகவல்களும் வெளியாகி வியப்பை ஏற்படுத்தி வருகிண்றன. இந்த நிலையில் அம்பானி குடும்த்தின் மொத்த சொத்து மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் அதிகபட்ச பங்குகளை வைத்திருப்பவர் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
mukesh ambani
ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகளை வைத்திருக்கும் அம்பானி குடும்ப உறுப்பினர் யார் தெரியுமா? அது முகேஷ் அம்பானியோ, நீதா அம்பானியோ, இஷா அம்பானியோ, ஆகாஷ் அம்பானியோ, ஆனந்த் அம்பானியோ அல்ல.
mukesh ambani and nita
திருபாய் அம்பானியால் நிறுவப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது அவரது மகன் முகேஷ் அம்பானியின் தலைமையில் இயங்குகிறது. ஃபோர்ப்ஸ் படி, முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு 123.7 பில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது..
Mukesh Ambani
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் அம்பானி குடும்பம் 50.39% பங்குகளை கொண்டுள்ளது. மீதமுள்ள 49.61% பங்குகள் எஃப்ஐஐ மற்றும் கார்ப்பரேட் அமைப்புகள் உட்பட பொது பங்குதாரர்களிடம் உள்ளது.
kokilaben ambani
அதன்படி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகள் முகேஷ் அம்பானியின் தாயார் திருபாய் அம்பானியின் மனைவி கோகிலாபென் அம்பானியிடம் உள்ளது. ஆம் கோகிலாபென் அம்பானி 1,57,41,322 பங்குகளை வைத்துள்ளார், இது நிறுவனத்தில் 0.24% பங்குகளை கொண்டுள்ளது.
Ambani Family
முகேஷ் அம்பானியின் மூன்று குழந்தைகள் ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி மற்றும் அனந்த் அம்பானி ஆகியோர் தலா 80,52,021 பங்குகளை வைத்துள்ளனர், இது நிறுவனத்தின் 0.12% பங்குகளை நெருங்குகிறது. கோகிலாபென் அம்பானியின் நிகர மதிப்பு சுமார் 18000 கோடி என்று சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ambani Family
சுத்திகரிப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு, பெட்ரோ கெமிக்கல்ஸ், டெலிகாம், சில்லறை வணிகம் மற்றும் ஊடகங்கள் என பல்வேறு துறைகளில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கோலோச்சி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தற்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக முகேஷ் அம்பானி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.