ஸ்டெம்பை எகிற வைத்த மிட்செல் ஸ்டார்க் – 3 ஓவரில் 3 விக்கெட், மாஸாக தொடங்கிய கேகேஆர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1
ஐபிஎல் 2024 தொடரின் முதல் தகுதிச் சுற்று போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1
ஆனால், இந்த மைதானத்தில் 2ஆவது பேட்டிங் செய்த அணியே அதிகளவில் வெற்றி பெற்றிருக்கிறது. அப்படியிருக்கும் போது முதலில் பேட்டிங் தேர்வு செய்து தவறு செய்துவிட்டார். இந்தப் போட்டியில் இரு அணிகளிலும் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், விஜயகாந்த் வியாஷ்காந்த், டி நடராஜன்.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஹெட் முதல் ஓவரிலேயே மிட்செல் ஸ்டார் பந்தில் கிளீன் போல்டானார். ரன் ஏதும் எடுக்கவில்லை. இவரைத் தொடர்ந்து வைபவ அரோரா வீசிய 2ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1
மிட்செல் ஸ்டார்க் வீசிய 3ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் நிதிஷ் ரெட்டி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அந்த ஓவரின் கடைசி பந்தில் ஷாபாஸ் அகமது ரன் ஏதும் எடுக்காமல் கிளீன் போல்டு ஆனார். இதன் மூலமாக ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு தான் ஒர்த் என்பதை நிரூபித்திருக்கிறார். அதுவும் முக்கியமான போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தற்போது வரையில் 8 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1
இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 26 போட்டிகளில் 17 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய ஒரு போட்டியிலும் கேகேஆர் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Qualifier 1
முதல் முறையாக இரு அணிகளும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்த மைதானத்தில் இதுவரையில் நடைபெற்ற 33 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 15 போட்டியிலும், சேஸ் செய்த அணி 18 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் இந்த மைதானத்தில் நடைபெற்ற 6 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 2 போட்டியிலும், 2ஆவது பேட்டிங் செய்த அணி 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.