- Home
- Gallery
- KGF-ல் ராக்கி பாய் ஆக மிரட்டிய யாஷ்.. சுந்தரபாண்டியன் படத்துல நடிச்சிருக்காரா? இவ்ளோ நாளா இதுதெரியாம போச்சே..!
KGF-ல் ராக்கி பாய் ஆக மிரட்டிய யாஷ்.. சுந்தரபாண்டியன் படத்துல நடிச்சிருக்காரா? இவ்ளோ நாளா இதுதெரியாம போச்சே..!
பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்து மாஸ் காட்டி வரும் கன்னட நடிகர் யாஷ், சுந்தரபாண்டியன் படத்தில் நடித்துள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கேஜிஎப் எனும் மூன்றெழுத்து மந்திரம் தான் கன்னட திரையுலகின் தலையெழுத்தையே மாற்றியது என்பது அனைவரும் அறிந்தது. அப்படம் ரிலீஸ் ஆகும் முன்னர் வரை கன்னடத் திரையுலகம் என்றாலே பிறமொழி படங்களை தங்கள் மொழியில் ரீமேக் செய்வார்கள் என்கிற பிம்பம் தான் இருந்து வந்தது. அதையெல்லாம் உடைத்து தவிடுபொடியாக்கி, கேஜிஎப் என்கிற மரண மாஸ் படத்தை கொடுத்தது கன்னட திரையுலகம். கன்னட திரையுலகின் வளர்ச்சிக்கும் இப்படம் பிள்ளையார் சுழி போட்டது.
கேஜிஎப் முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை அதைவிட பிரம்மாண்டமாக எடுத்து ரூ.1100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்துள்ளது. தமிழ் திரையுலகில் இன்னும் ஒரு படம் கூட ஆயிரம் கோடி என்கிற மைல்கல் வசூல் சாதனையை எட்டாமல் உள்ள நிலையில், கன்னட சினிமா அசால்டாக அந்த உயரத்தை எட்டிப்பிடித்துவிட்டது. இதையடுத்து காந்தாரா என்கிற படம் கன்னட திரையுலகை அடுத்த உயரத்துக்கு கொண்டு சென்றது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தற்போது கன்னட படங்கள் மீது இந்தியா முழுவதும் உள்ள மற்ற திரையுலகின் பார்வை திரும்பி இருக்கிறது. இப்படி குறுகிய காலகட்டத்தில் அசுர வளர்ச்சி கண்டுள்ள கன்னட திரையுலகம் ஒரு காலகட்டத்தில் ரீமேக் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வந்தது. கேஜிஎப் ஹீரோ யாஷ் கூட தமிழில் சூப்பர் ஹிட் ஆன படங்களை தேர்வு செய்து கன்னடத்தில் நடித்து வந்துள்ளார். அப்படி அவர் நடித்த ஒரு திரைப்படம் தான் சுந்தரபாண்டியன் ரீமேக்.
சசிகுமார், லட்சுமி மேனன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன தமிழ்ப்படம் சுந்தரபாண்டியன். இப்படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி இருந்தார். தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இப்படத்தை கன்னடத்தில் ராஜா ஹூலி என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். குரு தேஷ்பாண்டே என்பவர் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக மேக்னா ராஜ் நடித்திருந்தார். சுந்தரபாண்டியன் கன்னட ரீமேக்கும் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஒய் திஸ் கொலவெறி பாஸ்... புத்தாண்டுக்கு போட்டி போட்டு பிளாப் படங்களை ஒளிபரப்பும் டிவி சேனல்கள்...!