- Home
- Gallery
- மல்டி கலர் ஃப்ளோரல் புடவையில் கிறங்கடிக்கும் கீர்த்த சுரேஷ்.. இந்த புடவையின் விலை எவ்வளவு தெரியுமா?
மல்டி கலர் ஃப்ளோரல் புடவையில் கிறங்கடிக்கும் கீர்த்த சுரேஷ்.. இந்த புடவையின் விலை எவ்வளவு தெரியுமா?
ரகு தாத்தா படத்தின் புரோமோஷனின் போது நடிகை கீர்த்தி சுரேஷின் அணிந்திருந்த மல்டி கலர் ஃப்ளோரல் புடவை தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

Keerthy Suresh
நடிகை கீர்த்தி சுரேஷ் 2015-ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் அறிமுகமானார். அதன்பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ மற்றும் ரஜினிமுருகன், தளபதி விஜய்யின் பைரவா ஆகிய படங்களில் கீர்த்தி நடித்தார்.
Keerthy Suresh
ஆனால் கீர்த்தி சுரேஷின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி படம் என்றால் அது நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான மகாநடி படம் தான். மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த பயோபிக் படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தா கீர்த்தி சுரேன். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது.
இதை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சண்டக்கோழி 2 மற்றும் சர்கார் என பல வெற்றி படங்களில் நடித்தார். இப்படி தமிழில் ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ரகுதாத்தா படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Keerthy Suresh
ரகு தாத்தா படத்தின் புரோமோஷன் பணியில் தீவிரமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் விளம்பரப்படுத்தும் போது ஃப்ளோரல் புடவை அணிந்திருந்தார். அவரின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஃபேஷன் உலகில் தற்போது ஃப்ளோரல் புடவைகள் ட்ரெண்டாகி வருகின்றன. பல்வேறு பிரபலங்களும் இந்த புடவையை அணிந்து வீடியோக்கள் மட்டும் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
Keerthy Suresh
அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி ஃப்ளோரல் புடவை அணிந்து ஸ்டைலாக இருக்கும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். நேர்த்தியான கைவினைத்திறனுக்காக அறியப்பட்ட புகழ்பெற்ற பிராண்டான, Torani நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புடவையை கீர்த்தி அணிந்திருந்தார்.
Keerthy Suresh
கருப்பு நிறத்தில் உருவாக்கப்பட்ட இந்த புடவை மஞ்சள், பச்சை, பிங் மற்றும் சிவப்பு என மல்டி கலரில் பெரிய பெரிய மலர் வடிவங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பச்சை மற்றும் சில்வர் டோன்களில் உருவாக்கப்பட்ட பார்டர் சேலையின் அழகை மேலும் அதிகரித்தது. கீர்த்தி தனது சேலைக்கு மேட்சாக ஹால்டெர் நெக் மற்றும் பேக்லெஸ் பிளவுஸை அணிந்திருந்தார்.
Keerthy Suresh
கீர்த்தி சுரேஷின் இந்த ஃப்ளோரல் சேலையின் விலை ரூ. 61,000 ஆகும். நகைகளை பொறுத்த வரை வரை, வெள்ளை நிற முத்து சோக்கர் அணிந்திருந்த அவர் சிறிய காதணிகளை அணிந்திருந்தார். மிகவும் குறைவான மேக்கப் உடன், கோல்டன் ஐ ஷேடோ, லேசான லிப்ஸ்டிக் மூலம் க்யூட்டாக இருந்தார். ஹேர் ஸ்டைலை பொறுத்தவரை அழகாக ஜடை பின்னியிருந்த அவர் ஒரு சைடில் மட்டும் ரெட் கலர் ரோஜா பூக்களை வைத்திருந்தார்.
Keerthy Suresh
கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்திலும் கீர்த்தி நடித்து வருகிறார்.