31 வயசுலேயே இம்புட்டு சொத்தா... நல்ல வெயிட் பார்ட்டியா மாறிய கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Keerthy suresh
தந்தை தயாரிப்பாளர், தாய் நடிகை என குடும்பமே சினிமா பின்னணியில் இருந்ததால் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்துள்ளது. இதனால் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில மலையாள படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், பின்னர் சென்னையில் படிப்பை முடித்ததும் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இவர் தமிழில் முதன்முதலில் கதாநாயகியாக நடித்த திரைப்படம் இது என்ன மாயம்.
Keerthy suresh birthday
ஏ.எல்.விஜய் இயக்கிய இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார் கீர்த்தி. இப்படம் பெரியளவில் வெற்றிபெறாவிட்டாலும், அவரின் துறுதுறு நடிப்பிற்கு அடுத்தடுத்து கோலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய திரைப்படங்கள் கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன. பின்னர் தனுஷுக்கு ஜோடியாக தொடரி படத்தில் நடித்த இவருக்கு, அடுத்ததாக விஜய் உடன் பைரவா மற்றும் சர்க்கார் என இரண்டு படங்களில் ஜோடி சேர வாய்ப்பு கிடைத்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Actress Keerthy Suresh
இப்படி தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்தது மகாநடி. அப்படத்தில் தன்னுடைய அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி அசத்திய கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதன்பின் டிராக்கை மாற்றிய கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவந்த கீர்த்தி தற்போது பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
Keerthy suresh salary
இந்தியில் கீர்த்தி சுரேஷை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியது இயக்குனர் அட்லீ தான். அவர் தயாரிக்கும் படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இது விஜய்யின் தெறி ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்படி கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிசியான நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் இன்று தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்து மழை பொழிகிறது.
Keerthy suresh net worth
இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம். அதன்படி அவருக்கு மொத்தம் ரூ.41 கோடி சொத்துக்கள் உள்ளதாம். ஒரு படத்துக்கு ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கும் கீர்த்தி சுரேஷ், விளம்பரங்களில் நடிக்க ரூ.30 லட்சம் சம்பளமாக வாங்குகிறாராம். இதுதவிர தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புரமோஷன் செய்து பதிவிடும் பதிவுகளுக்கு அவர் ரூ.25 லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமாக சென்னை, ஐதராபாத் மற்றும் கேரளாவிலும் சொகுசு வீடுகள் உள்ளதாம். இவரிடம் வால்வோ எஸ்90, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ், டோயோட்டா இன்னோவா ஆகிய சொகுசு கார்கள் உள்ளன.
இதையும் படியுங்கள்... ‘தல’ அஜித் கழட்டிவிட்ட விக்னேஷ் சிவனுக்கு ‘தல’ தோனி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு - வாயடைத்துப்போன விக்கி