வீட்டில் பூனை வளர்ப்பது நல்லதா.. கெட்டதா? வாஸ்து சொல்வது என்ன?
Vastu For Cat At Home : பலர் தங்களது வீட்டில் பூனை வளர்க்க விரும்புகிறார்கள். எனவே, வாஸ்து சாஸ்திரத்தின் படி, பூனை தொடர்பான பல சுப மற்றும் அசுப அறிகுறிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
வாஸ்து சாஸ்திரத்தில் பல விலங்குகள், பறவைகள் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதே சமயம், சிலவை அசுபமாகவும் கருதப்படுகிறது. அந்தவகையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, பூனை தொடர்பான பல சுப மற்றும் அசுப அறிகுறிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை குறித்து இங்கு பார்க்கலாம்.
மத நம்பிக்கைகளின் படி, பூனை வளர்ப்பது மங்களகரமானது. ஏனென்றால், பூனை சூனியத்தின் விளைவுகள் இருந்து நம்மை பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், சில சமயம் பூனை வளர்ப்பது அசுபமானது. ஏனென்றால், வீட்டில் பூனை இருப்பது ராகு உறுப்புகளை செயல்படுத்துகிறது. இதனால் நபரின் வாழ்க்கையில் சிக்கல் அதிகரிக்கும்.
வீட்டில் வளர்க்கும் பூனை ஒரு பூனைக்குட்டியை பெற்றெடுத்தால், அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னேற்றம் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், எதிர்மறை ஆற்றல் அந்த வீட்டிற்குள் நுழைவதில்லை.
இதையும் படிங்க: நைட் டைம்ல இந்த 6 விஷயங்களை பண்ணாதீங்க.. இல்லனா பிரச்சினை தான்.. வாஸ்து சொல்றத கேளுங்க!!
பூனையின் சுபம் மற்றும் அசுபம் அதன் நிறத்துடன் தொடர்புடையது. அதாவது உங்கள் வீட்டில் தங்க நிறத்தில் பூனை இருந்தால் அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது மற்றும் அது நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
இதையும் படிங்க: எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் தெரியுமா? வாஸ்து டிப்ஸ் இதோ!!
அதே சமயம் வீட்டில் கருப்பு பூனை வளர்ப்பது நல்லதாக கருதப்படுவதில்லை. முக்கியமாக, கருப்பு பூனை வீட்டில் அழ ஆரம்பித்தால் அது அசுப அறிகுறியாக கருதப்படுகிறது. மேலும், இது விரும்பத்தகாத சம்பவங்கள் அல்லது கெட்ட செய்திகள் வருவதை குறிக்கும்.