MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வசூலில் சூப்பர்ஸ்டார் படத்தை ஓவர்டேக் செய்த கவினின் ஸ்டார் திரைப்படம் - இரண்டே நாளில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

வசூலில் சூப்பர்ஸ்டார் படத்தை ஓவர்டேக் செய்த கவினின் ஸ்டார் திரைப்படம் - இரண்டே நாளில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

இளன் இயக்கத்தில் கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வரும் நிலையில், அதன் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 12 2024, 12:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Kavin

Kavin

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்கிற தொடரின் மூலம் அறிமுகமானவர் கவின். இதையடுத்து சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்த கவினுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இதையடுத்து சினிமாவுக்குள் நுழைந்த கவின், நட்புனா என்னனு தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்தார். அப்படம் பெரியளவில் வெற்றிபெறாததை அடுத்து மீண்டு சின்னத்திரைக்கு திரும்பிய அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
star movie Kavin

star movie Kavin

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் டிரெண்டிங் ஸ்டாராக உருவெடுத்த கவினுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. அந்த வகையில் பிக்பாஸுக்கு பின் அவர் நடித்த லிப்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடிக்க கமிட்டான திரைப்படம் டாடா. கடந்தாண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. 

இதையும் படியுங்கள்... கோடிகளில் புரளும் தளபதியின் ‘தம்பி’கள்... அட்லீ, நெல்சன், லோகேஷுக்கு இத்தனை கோடி சம்பளமா?

35
star movie Collection

star movie Collection

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கவினின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்ததோடு அவர் நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது ஸ்டார் திரைப்படம் வெளியாகி உள்ளதி. இளன் இயக்கிய இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

45
star movie Box Office

star movie Box Office

ஸ்டார் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மே 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.3 கோடி வசூலித்து இருந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று ரூ. 4 கோடி வசூலித்து இருக்கிறது. உலகளவில் இப்படத்தின் வசூல் கிட்டத்தட்ட ரூ.10 கோடியை எட்டியிருக்கும் என கூறப்படுகிறது. 

55
Star overtake Lal Salaam in Box Office

Star overtake Lal Salaam in Box Office

இதில் மற்றுமொரு ஆச்சர்ய தகவல் என்னவென்றால் ரஜினி நடித்த லால் சலாம் திரைப்படம் ரிலீஸ் ஆனபோது, அப்படம் இரண்டாம் நாளில் வெறும் ரூ.2.91 கோடி மட்டுமே இந்திய அளவில் வசூலித்து இருந்தது. ஆனால் கவினின் ஸ்டார் திரைப்படம் 2-ம் நாளில் மட்டும் ரூ.4 கோடி வசூலித்து அதை ஓவர்டேக் செய்துள்ளது. 

இதையும் படியுங்கள்... Vijay : விறுவிறுப்பான படப்பிடிப்பில் தளபதி 68.. கேமியோவில் அசத்த வரும் 4 Celebrities - வெளியான தகவல் உண்மையா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved