MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Kavin Salary : முதன்முறையாக நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் கவின்... அதற்கு அவர் கேட்ட சம்பளம் இத்தனை கோடியா?

Kavin Salary : முதன்முறையாக நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் கவின்... அதற்கு அவர் கேட்ட சம்பளம் இத்தனை கோடியா?

ஸ்டார் படத்துக்கு பின்னர் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ள கவின், தன் சம்பளத்தை மளமளவென உயர்த்தி இருக்கிறாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 30 2024, 09:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
kavin

kavin

கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்துகொண்ட பின்னர் இவரது வாழ்க்கையே டோட்டலாக மாறிவிட்டது. அதன்பின்னர் சினிமாவில் வித்தியாசமாக கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கவின், கடந்த ஆண்டு டாடா என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து அவர் நடிப்பில் ஸ்டார் திரைப்படம் உருவானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Kavin upcoming movies

Kavin upcoming movies

இளன் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடித்த ஸ்டார் திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படத்தில் நல்ல ஓப்பனிங் கிடைத்திருந்தாலும், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததால் போகப்போக வசூல் டல் அடித்தது. ஸ்டார் படம் பெரியளவில் சோபிக்காவிட்டாலும் நடிகர் கவினுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் கைவசம் தற்போது 4 படங்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்... BalaKrishna : குடிபோதையில் நடிகை அஞ்சலியிடம் அத்துமீறி நடந்துகொண்டாரா பாலகிருஷ்ணா? பரபரப்பை கிளப்பிய வீடியோ

35
Kavin Next Movie

Kavin Next Movie

இதில் நெல்சன் தயாரிப்பில் பிளெடி பெக்கர் என்கிற படத்திலும், நடன இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ள படத்திலும் நடித்து முடித்துள்ளார் கவின். இதுதவிர வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் தற்போது நடித்து வருகிறார் கவின். இதில் நடிகை ஆண்ட்ரியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர நடிகர் கவின் கைவசம் மேலும் ஒரு படமும் உள்ளது.

45
Kavin, Nayanthara

Kavin, Nayanthara

அப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இயக்க உள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். தன்னைவிட வயதில் மூத்த நடிகை காதலிக்கும் இளைஞனாக கவின் இப்படத்தில் நடிக்கிறாராம். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

55
Kavin salary

Kavin salary

இந்த நிலையில், நடிகர் கவின் இப்படத்திற்காக வாங்க உள்ள சம்பளம் குறித்த விவரம் கசிந்துள்ளது. அதன்படி அவருக்கு ரூ,8 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாம். கடைசியாக வெளிவந்த ஸ்டார் படத்திற்காக ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய கவின், தற்போது இப்படத்திற்காக தன் சம்பளத்தை 8 கோடியாக உயர்த்தி இருப்பது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... சூர்யா 44 படத்துக்காக பிரபல இளம் ஹீரோவை வில்லனாக களமிறக்கும் கார்த்திக் சுப்புராஜ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved