- Home
- Gallery
- Karthigai Deepam: பல்லவிக்கு விலை பேசும் சிதம்பரம்.! தீபாவிக்கு வந்த புது பிரச்சனை? கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: பல்லவிக்கு விலை பேசும் சிதம்பரம்.! தீபாவிக்கு வந்த புது பிரச்சனை? கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். வாரத்தின் ஏழு நாட்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சிதம்பரம் ஒரு மீட்டிங் இருக்கு வந்திருக்க இங்கு எல்லோரும் கார்த்திக்காக காத்திருப்பதாக சொல்ல கார்த்திக் மாஸாக என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது சிதம்பரம் எப்பவும் போல இந்த முறையில் எனக்கு தானே பிசினஸ் கொடுக்கப் போறீங்க என்று சொல்ல வட மாநில கம்பெனி கிடையாது கார்த்திக் ரிலீஸ் பண்ண பாட்டுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கு, அந்த பல்லவி என்ற பாடகிக்கு ஒரு டிமாண்ட் இருக்கு அதனால பல்லவிக்காக யார் பாடுறாங்களோ அவங்களுக்கு தான் இந்த முறை பிசினஸ் என்று சொல்ல சிதம்பரம் பணம் கொடுத்த அந்த பல்லவி எனக்கும் பாடி கொடுப்பார் என்று சொல்கிறார்.
வடமாநில கம்பெனி பல்லவியிடம் அக்ரிமெண்ட் போட்டுட்டு வர உங்களுக்கு தான் பிசினஸ் என்று சொல்லி அனுப்ப இருவரும் கிளம்பி வருகின்றனர். அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா சிதம்பரத்தை சந்தித்து அந்த பல்லவி தான் உங்களுக்காக வந்து பாட மாட்டார் என்று சொல்ல எல்லாருக்கும் ஒரு வேலை இருக்கு அது கொடுத்த பல்லவி கண்டிப்பா எனக்கு பாடி கொடுப்பா என்று பதில் கூறுகிறார்.
அதன் பிறகு சிதம்பரம் தீபாவுக்கு போன் செய்து பேச முதலில் பெரிதாக ரியாக்ட் செய்யாத தீபா, சிதம்பரம் ஹாய் பல்லவி என்று சொன்னதும் அதிர்ச்சி அடைகிறாள். பிறகு சிதம்பரம் தீபாவை நேரில் சந்தித்து உங்க அண்ணனுக்கு வேலை கிடையாது உன் தம்பிக்கு ட்ரீட்மென்ட் பாக்கணும் இது எல்லாத்துக்கும் தேவையான பணத்தை நான் தருவேன் என சொல்கிறார்.
நீ எனக்காக பாடி கொடுக்கணும் என்று சொல்ல தீபா முடியாது என கூறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.