- Home
- Gallery
- போலீசுடன் வந்த ராஜேஸ்வரி... கழுத்தில் கத்தியோடு அதிர்ச்சி கொடுத்த ரியா- கார்த்திகை தீபம் சீரியல் ட்விஸ்ட்
போலீசுடன் வந்த ராஜேஸ்வரி... கழுத்தில் கத்தியோடு அதிர்ச்சி கொடுத்த ரியா- கார்த்திகை தீபம் சீரியல் ட்விஸ்ட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா ரம்யாவுடன் சாமியாரை பார்க்க கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Karthigai deepam serial
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின், சீரியலில், இன்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அதாவது தீபா சாமியாரை பார்க்க வேண்டும் என கூறி, அபிராமி சரியாக, என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ அதை அப்படியே முழு மனதுடன் செய்து முடிவெடுக்கிறார்.
Zee tamil Karthigai deepam serial
அதே நேரம் ரம்யாவும், எப்படியாவது தீபாவை தீர்த்து கட்ட வேண்டும் என அழைத்து செல்கிறாள். மறுபக்கம் ரம்யா, அருண் ஐஸ்வர்யாவை கோவிலுக்கு அழைத்து, நீ அன்னைக்கு எங்க அம்மாவுக்காக என்னென்னமோ பண்ணுவேன்னு பில்டப்பா கொடுத்தியே, இப்போ அதை ஏற்பாடு பண்ணி இருக்கேன் என கூறி உப்பின் மீது அங்கபிரதர்சனம் செய்ய சொல்கிறான்.
இதையும் படியுங்கள்... சிகிச்சைக்கு பணமின்றி தவித்த வெங்கல் ராவ்... ஒரு ரூபா கூட கொடுக்காத வடிவேலு; ஓடோடி வந்து உதவிய சிம்பு
Karthigai deepam serial Update
வசமாக சிக்கி கொண்ட ஐஸ்வர்யா, பண்ண முடியாது என்று சொல்ல முடியாமல் பரிதவிக்கிறாள். ஒருவழியாக ஐஸ்வர்யா முதல் பரிகாரத்தை முடித்ததும், அருண்... சாமி அடுத்த பரிகாரத்தை சொல்லுங்க என்று சொல்கிறான். சாமியார் ஐஸ்வர்யாவை கையை காட்ட சொல்லி அக்கினி சட்டியை வைத்து அலற விடுகிறார். மற்றொருபுறம், அபிராமியின் இந்த நிலைக்கு காரணமான ரியாவை வீட்டில் வைத்து பூட்டி விட்டு ராஜேஸ்வரி மார்க்கெட் செல்கிறார்.
Karthigai deepam serial Today Episode
மார்க்கெட் போய்விட்டு திரும்பி வரும் போது ராஜேஸ்வரி போலீசுடன் வந்து இறங்க, ரியா அதிர்ச்சி அடைகிறாள். எப்படி தப்பிப்பது என யோசித்தபடியே கிச்சனுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் அவளை , ரியா ரியா என அழைத்தபடியே ராஜேஸ்வரி உள்ளே வர, கழுத்தில் கத்தியை வைத்து அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில், இன்னும் என்னென்ன நடக்க போகிறது... தீபா ரம்யா வலையில் சிக்குவாரா? ரியா நிலைமை என்னவாகும் எனபதை நாளை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... Ajith : தலைக்கு தில்ல பாத்தியா... BMW காரில் 220 கி.மீ வேகத்தில் சிட்டாக பறந்த அஜித் - வைரலாகும் வீடியோ