Karthigai Deepam: ரம்யாவின் சூழ்ச்சியில் சிக்கிய தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரியா ஐஸ்வர்யாவுக்கு போனை போட்டு மாட்டி விட நினைச்ச உங்க அம்மாவை கொன்னுடுவேன் என்று மிரட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Karthigai deepam serial
அதாவது, ஐஸ்வர்யா வைரத்தில் பங்கு கேட்க ரியா நீ நான் சொல்ற மாதிரி நடந்துக்கிட்டா நீ கேக்குற பங்கை கொடுப்பதோடு உங்க அம்மாவுக்கு கொடைக்கானலில் ஒரு எஸ்டேட் மற்றும் ஒரு கம்பெனியையும் வாங்கி தருவேன் என்று சொல்கிறாள். இதை கேட்டு ஐஸ்வர்யா பேராசையில் கொடைக்கானலில் எஸ்டேட்டா என்று வாயை பிளக்க அவளுக்கு பளாரென அறை விழுகிறது.
Karthigai deepam serial
அருண் எங்க அம்மா அங்க உயிருக்கு போராடிட்டு இருக்காங்க, நீ சொத்தை பத்தி பேசிட்டு இருக்க, யார் கூடடி பேசிட்டு இருக்க என்று போனை பிடிங்கி பார்க்க ஐஸ்வர்யா பதற ரியா ராஜேஸ்வரி போனில் இருந்து போன் செய்ததால் அம்மாவிடம் தான் பேசிட்டு இருந்ததாக சொல்லி சமாளிக்கிறாள்.
விவாகரத்துக்கு பின் கிடைத்த சுதந்திரம்! நீண்ட இடைவெளிக்கு பின்னர் இமானுடன் கூட்டணி வைத்த சைந்தவி!
Karthigai deepam serial
இதை தொடர்ந்து ரம்யா பரிகாரம் செய்ய ஏலத்தில் வாங்கி வந்த அம்மன் சேலையை கட்டி கொண்டு சாமியாரை பார்க்க கிளம்ப மீனாட்சி உனக்கு ஏதோ பெரிய ஆபத்து வருவது போல் கனவு கண்டதாக சொல்லி தடுக்க முயற்சிக்க கனவு தானே அக்கா, எனக்கு ஒன்னும் ஆகாது என்று கிளம்பி செல்கிறாள்.
Karthigai deepam serial
அம்மன் புடவையில் வரும் தீபாவை பார்த்து ரம்யா அதிர்ச்சி அடைகிறாள், இந்த புடவையை மாற்ற வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அவள் வீட்ல யார் கிட்டயும் எதுவும் சொல்லலையே என்று கேட்க அவள் கார்த்திக்கிடம் சொன்னதாக சொல்ல ரம்யா மேலும் ஷாக் ஆகிறாள். ஆனால் கார்த்திக் நான் சொன்னதை கேக்கும் நிலைமையில் இல்ல, பிரம்மை பிடித்தது போல் உட்கார்ந்து இருந்ததாக சொல்ல ரம்யா கொஞ்சம் நிம்மதி அடைகிறாள்.
இளையராஜா ஆசை நிறைவேறல! நானும் லிவிங்ஸ்டனும் பிரிய காரணம் 2 பெண்கள் தான்! ஜி.எம்.குமார் ஓப்பன் டாக்!
Karthigai deepam serial
மறுபக்கம் கார்த்திக் அப்படியே உட்கார்ந்திருக்க மீனாட்சி அவனுக்கு பால் கொண்டு போய் கொடுத்து குடிக்க சொல்கிறாள், நீயே இப்படி உடைந்து போய்ட்டா ரியாவை எப்படி பிடிக்கிறது? அவளை பத்தி எந்த ஆதாரமும் இல்லனு சொல்றாங்க. அந்த கேமரா மேன் யார்? அவனை உனக்கு தெரியுமா என்று கேட்க கார்த்திக் மொத்தமாக ஒரு ஈவென்ட் கம்பெனி கிட்ட கொடுத்துட்டேன் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? தீபாவுக்கு வர போகும் ஆபத்து என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.