- Home
- Gallery
- எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா... ரம்யாவை தலைதெறிக்க ஓடவிட்ட கார்த்திக் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா... ரம்யாவை தலைதெறிக்க ஓடவிட்ட கார்த்திக் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரம்யா தீபாவிடம் பங்ஷனுக்கு வந்து கொண்டிருப்பதாக பொய் சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரம்யா தீபாவிடம் பங்ஷனுக்கு வந்து கொண்டிருப்பதாக பொய் சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கார்த்திக் தீபா ஜோடியாக சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க அதே போல் அபிராமி அருணாச்சலம் போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர்.
Zee Tamil Karthigai deepam serial
இந்த நேரத்தில் ரம்யா காரில் இருந்து கிராண்டான துணியில் இறங்கி நடந்து வர, அதே ஸ்டைலில் அதே மாதிரியான துணியில் இன்னொரு பெண் கூடவே நடந்து வருகிறாள். அவளிடம் நீ கார்த்தியிடம் போய் நான் தான் அம்முனு பேசு என்று சொல்லி அனுப்புகிறாள் ரம்யா. எக்காரணத்தை கொண்டும் மாட்டிக்காத என்றும் எச்சரித்து அனுப்புகிறாள். பிறகு ரம்யா தீபாவை சந்தித்து நான் சொன்ன மாதிரியே வந்துட்டேன் என்று பேசிக் கொண்டிருக்கிறாள்.
இதையும் படியுங்கள்... அண்ணா சீரியல் : அவ ஜெயிச்சா நமக்கு ஜெயில் தான்... பரணியை தோற்கடிக்க கங்கணம் கட்டும் முத்துப்பாண்டி
Karthigai deepam serial Update
அதேபோல் மறுபக்கம் அம்முவாக நடிக்க வந்த பெண் கார்த்தியிடம் சென்று நான்தான் அம்மு என்று சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசுகிறாள். அவளது கையில் டாட்டூ இல்லாத நிலையில் இது அம்மு இல்லை என்பதை கார்த்திக் புரிந்து கொள்கிறான். இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந்து கொள்ளும் கார்த்திக் வாங்க தீபாவை போய் பாத்துட்டு வரலாம் என்று சொல்லி அந்த பெண்ணை கூப்பிட அவள் அதிர்ச்சி அடைகிறாள்.
Karthigai deepam serial Today Episode
நான் அம்மு கிடையாது, தீபாவோட ஃப்ரெண்டும் நான் கிடையாது. மண்டபம் மாறி வந்துட்டேன் என்று சொல்லி எஸ்கேப் ஆகி விடுகிறாள். இதை தூரத்தில் இருந்து கவனித்த ரம்யாவும் தீபாவுக்கு தெரியாமல் எஸ்கேப் ஆகிவிட, தீபா அம்முவை தேடி அவளுக்கு போன் செய்ய, ரம்யா போனை எடுக்காமல் இருக்கிறாள். இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... Ethirneechal : சீரியல் முடிந்தாலும்.. நட்புக்கு முடிவில்லை! எதிர்நீச்சல் சீரியல் டீமின் ரியூனியன் போட்டோஸ் இதோ