- Home
- Gallery
- கார்த்திகை தீபம் சீரியல் : கார்த்தி உடன் பெங்களூரு செல்ல... ரம்யா போட்ட பிளானில் மண்ணை அள்ளிப்போட்ட தீபா
கார்த்திகை தீபம் சீரியல் : கார்த்தி உடன் பெங்களூரு செல்ல... ரம்யா போட்ட பிளானில் மண்ணை அள்ளிப்போட்ட தீபா
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மீனாட்சி புடவை எடுப்பதற்காக ரம்யா வீட்டிற்கு திரும்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மீனாட்சி மறந்துவைத்து விட்டு வந்த புடவை எடுப்பதற்காக ரம்யா வீட்டிற்கு திரும்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ரம்யா அவர்கள் விட்டுச் சென்ற புடவை எடுத்து கட்டி பார்த்துக் கொண்டிருக்க, மீனாட்சி காலிங் பெல் அடித்ததும் அதை கவனித்த ரம்யா புடவையை எடுத்து வைத்து மீனாட்சியிடம் கொடுத்து அனுப்புகிறாள்.
Zee Tamil Karthigai deepam serial
கூடவே மீனாட்சி ரம்யா, கார்த்திக்காக வைத்திருந்த சீதாராமன் சிலையையும் கொண்டு செல்கிறார். இதை அடுத்து வீட்டுக்கு வந்த மீனாட்சி அந்த சிலையை தீபாவிடம் கொடுப்பதற்காக ரம்யாவிடம் சொல்லாமலே கொண்டு வந்ததாக சொல்கிறார். ரம்யா சார்பாக நானே கொடுத்து விட கொண்டு வந்ததாக சொல்கிறார்.
இதையும் படியுங்கள்... Anna serial : பறிபோன பதவி... அழுது புலம்பும் முத்துப்பாண்டி; தர்மகத்தா ஆகப்போவது யார்? அண்ணா சீரியல் அப்டேட்
Karthigai deepam serial Update
இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வரும் கார்த்திக் ரம்யாவுடன் பெங்களூரு செல்வதாக சொல்ல, தீபா பொசசிவ்வில் கோபப்படுகிறாள். இதைப் புரிந்து கொண்ட கார்த்திக் இங்கிருந்து நகர்ந்து வருகிறான். மறுபக்கம் ரம்யா பெங்களூருக்கு கிளம்ப தயாராக இருக்க, டிரைவரையும் வேண்டாம் என்று சொல்கிறாள். கார்த்தியே காரை ஓட்டுவான் எனவும் கணக்கு போட அங்கு வந்த கார்த்தி என்ன தப்பா நினைச்சுக்காதீங்க..
Karthigai deepam serial Today Episode
என்னால உங்க கூட பெங்களூரு வர முடியாது என்னுடைய மனைவிக்கு உடம்பு சரியில்ல இப்ப நான் அவுங்க கூட இருக்கணும் என்று சொல்ல, ரம்யா வேறு வழி இன்றி ஓகே சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... Chaitra Reddy : கணவருடன் சேர்ந்து குட் நியூஸ் சொன்ன கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி - குவியும் வாழ்த்து