MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரவுடியை கண்டுபிடித்த கார்த்திக்... கையும் களவுமாக சிக்கினாரா ரம்யா? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

ரவுடியை கண்டுபிடித்த கார்த்திக்... கையும் களவுமாக சிக்கினாரா ரம்யா? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கோவிலுக்கு வந்திருந்த அபிராமியும் மீனாட்சியும் ரம்யா வீட்டிற்கு செல்ல முடிவு செய்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 04 2024, 04:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam serial

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கோவிலுக்கு வந்திருந்த அபிராமியும் மீனாட்சியும் ரம்யா வீட்டிற்கு செல்ல முடிவு செய்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, தீபாவை கொல்ல வந்த ரவுடி கோவில் அருகே போன் பேசி கொண்டே நடந்து வர, எதிரில் மீனாட்சியும் போன் பேசியபடி நடந்து வர இருவரும் மோதி கொள்கின்றனர், 

24
Zee Tamil Karthigai deepam serial

Zee Tamil Karthigai deepam serial

மீனாட்சிக்கும் ரவுடிக்கும் வாக்குவாதம் ஏற்பட, ஒரு கட்டத்தில் போலீசை கூப்பிட்டு அவனை பிடித்து கொடுக்கின்றனர். அதன் பிறகு அந்த ரவுடி ரம்யாவுக்கு போன் செய்து தான் கைதான விஷயத்தை சொல்ல, அவள் அவனை வெளியே எடுக்க ஸ்டேஷனுக்கு கிளம்புகிறாள், மறுபக்கம் கார்த்திக் ஜூஸில் மறந்து கலந்தது யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்று கம்பளைண்ட் கொடுக்க ஸ்டேஷனுக்கு வருகிறான். 

அப்போது கார்த்தியின் நண்பரான இன்ஸ்பெக்டர், உங்க அண்ணி கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்கிட்டானு கைது பண்ணி இருக்கோம், அவனை விசாரிக்கும் போது அவன் கிட்ட கத்தி இருந்தது, தீபாவை குத்த வந்தது இவனா பாரு என்று காட்ட, கார்த்திக் இவன் தான் என்று அடையாளம் காட்டுகிறான். 

இதையும் படியுங்கள்... அண்ணா சீரியல் : ஷண்முகத்தை என்கவுண்டரில் போட்டு தள்ளபோகும் முத்துப்பாண்டி... காப்பாற்றுவாளா பரணி?

34
Karthigai deepam serial Update

Karthigai deepam serial Update

அதன் பிறகு ரம்யாவும் ஸ்டேஷனுக்கு வர, கார்த்திக்கிடம் சிக்கி கொள்கிறாள். எதுக்கு இங்க வந்தீங்க என்று விசாரிக்க, ரம்யா ஒருத்தன் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்பதாக கம்பளைண்ட் கொடுக்க வந்ததாக சொல்கிறாள். பிறகு இன்ஸ்பெக்டர் இவனா பாருங்க என்று காட்ட, ரம்யாவும் ஆமாம் என்று தலையாட்டி அங்கிருந்து கிளம்பி வருகிறாள். அதை தொடர்ந்து அபிராமியும் மீனாட்சியும் வீட்டிற்கு வர ரம்யா அவர்களை வரவேற்கிறாள். 

44
Karthigai deepam serial Today Episode

Karthigai deepam serial Today Episode

பிறகு அப்பாவிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைக்க, அவர் கார்த்திக்கு முதல் முதலாக என் பொண்ணை தான் பொண்ணு பார்க்க வந்தீங்க என்று சொல்ல, அபிராமி ஷாக் ஆகிறாள். இதையடுத்து ரம்யா அப்பா சொன்னதை மனசுல வச்சிக்காதீங்க, கார்த்திக்.. தீபாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்றும் சொல்கிறாள். அபிராமியும் மீனாட்சியும் கோவிலில் இருந்து கொண்டு வந்த சாமி புடவையை இங்கேயேமறந்து வைத்து விட்டு கிளம்பி விட, ரம்யா அந்த புடவையை எடுத்து வைத்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயன் படித்த கல்லூரியில் டி இமானின் இசை நிகழ்ச்சி... கடைசி நேரத்தில் ரத்து - காரணம் என்ன?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved