- Home
- Gallery
- தீபாவை தேடும் கார்த்திக்.. பொய் சொல்லும் ரம்யா.! அடுத்து நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!
தீபாவை தேடும் கார்த்திக்.. பொய் சொல்லும் ரம்யா.! அடுத்து நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக், மாணிக்கம் என இருவரும் தீபாவை தேடி கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கார்த்திக் கோவிலுக்கு வந்து தேட அங்கு அவனது நண்பன் இளையராஜாவை பார்க்க அவன் என்ன மாப்ள கோவிலுக்கு வந்திருக்க என்று கேட்க தீபா காணாமல் போன விஷயத்தை சொல்கிறான். பிறகு மூவரும் சேர்ந்து தேட தொடங்குகின்றனர்.
இதையடுத்து கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்து தீபாவை பார்த்தீங்களா என்று விசாரிக்க அவள் இல்லை என்று பொய் சொல்கிறாள், மேலும் ரியா ஏன் தீபாவை கடத்தி இருக்க கூடாது, அந்த கோணத்தில் விசாரித்து பாருங்க என்று சொல்லி போனை வைக்கிறாள்.
Karthigai deepam
உடனே ரம்யா ஆனந்திற்கு போன் செய்து தீபாவை ரியா கடத்தி இருக்க வாய்ப்பிருக்கு, அவ வேற உங்களுக்கு போன் செய்து தீபாவை கடத்துவேனு சொல்லி இருக்கா என்று சொல்ல ஆனந்திற்கும் சந்தேகம் வருகிறது.
Karthigai deepam serial
அதன் பிறகு ரம்யா ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து ராஜேஸ்வரியிடம் பேச்சு கொடுத்து அப்படியே ரூமிற்குள் உள்ளே சென்று ரியாவை தேட அவள் பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்கிறாள். பாத்ரூமில் ஒளிந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரம்யா நெருங்கி செல்ல ரியா கரப்பான் பூச்சியை தூக்கி போட ரம்யா அதை பார்த்து பயந்து அங்கிருந்து நகர்ந்து வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.