- Home
- Gallery
- ஆத்தாடி... ஸ்கோர் செய்ய ஓடி பளார் வாங்கிய ஐஸ்வர்யா? சாமியாரால் சிக்க போகும் ரம்யா! கார்த்திகை தீபம் அப்டேட்!
ஆத்தாடி... ஸ்கோர் செய்ய ஓடி பளார் வாங்கிய ஐஸ்வர்யா? சாமியாரால் சிக்க போகும் ரம்யா! கார்த்திகை தீபம் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும், இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பரபரப்பான தொடரான கார்த்திகை தீபம் சீரியலில், அபிராமி மீண்டும் கார்த்தி - தீபா திருமணத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆசையை வெளிப்படுத்திய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.

ரியாவால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த அபிராமி, தீபாவின் வேண்டுதலாலும், மருத்துவர்களின் சிகிச்சையாலும் மீண்டு கண் விழித்துள்ள நிலையில்... அபிராமிக்கு சாப்பாடு கொடுக்கும் போது, அவர் தன்னுடைய மூன்று மருமகள்களும் பார்த்து சாப்பிட்டீர்களா என்று கேட்கிறார். அதற்க்கு மூன்று மருமகள்களும் சாப்பிட்டாச்சு என கூறுகிறார்கள்.
குறுக்கிடும் மீனாட்சி, எதுக்கு தீபா நீ இப்போ பொய் சொல்ற என கேட்டு, அபிராமிக்காக தீபா விரதம் இருக்கும் தகவலை கூறுகிறார். அபிராமி இப்போது நான் குடமாகிவிட்டேன் இன்னும் ஏன் விரதம் எடுக்க வேண்டும் என கூறி தீபாவை நினைத்து மனதிற்குள்ளேயே சந்தோஷ படுகிறார்.
மற்றொருபுறம் தீபாவை பிளான் போட்டு கொலை செய்ய நினைத்த அந்த போலி சாமியார் சேகர், ரம்யாவின் வீட்டிற்கு வந்து சந்திக்க, ரம்யா கதையாக பணத்தை அவன் கையில் கொடுத்து, இந்த ஊர்ல நீ இப்போதைக்கு இருக்க கூடாது என அலர்ட் செய்து வேறு ஊருக்கு செல்ல சொல்கிறாள்.
மேலும், அம்பிராமி உடல் நிலை குறித்து கேள்விப்பட்ட பரமேஸ்வரி பாட்டி, மருத்துவமனைக்கு பதறி அடித்து கொண்டு ஓடி வர, இதை பார்த்த ஐஸ்வர்யா முதல்ல நாம போய் பேசி, அவரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என... பாட்டி.. பாட்டி.. என்று கூப்பிட்டுக்கொண்டே செல்ல அபிராமி ஐஸ்வர்யாவின் கன்னத்தில் பளார் என ஒரு அரை விடுகிறார்.
இத்தனை பேர் இருந்தும் அபிராமிக்கு இப்படி ஆன தகவலை ஏன் என்னிடம் கூறவில்லை என கோபப்பட, பின்னர் தீபாவின் விரதம் குறித்தும், மாமியாருக்காக தாலியை கழட்டிவிட்டு மஞ்சள் கயிறு கட்டி இருப்பது தெரியவர பரமேஸ்வரி பாட்டி பெருமையாக பேசுகிறார்.
அதே போல் இன்னொருபும் ரம்யாவிடம் இருந்து காசு வாங்கிக்கொண்டு அந்த போலி சாமியார் வேகமாக சென்று கொண்டிருக்க, எதிரே வரும் இளையராஜா பைக்கில் தவறுதலாக இடிக்க இருவருக்கும் வாக்குவாதம் உருவாகிறது. அங்கு வந்த போலீஸ் இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, நேரிடுகிறது. சேகர் ரம்யாவுக்கு போன் போட்டு போலீசில் சிக்கிய விஷயத்தை கூறி காப்பாற்றுமாறு கேட்க, இளையராஜா கார்த்திக்கு போன் போட்டு ஸ்டேஷனுக்கு வர சொல்கிறான். இப்படியான நிலையில் கார்த்தியிடம் ரம்யா - சேகர் இருவரும் சிக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.