- Home
- Gallery
- கார்த்திகை தீபம் சீரியல் : தொலைந்து போன தீபாவை தேடி அலையும் கார்த்திக்.. அருணாச்சலத்திடம் செம டோஸ் வாங்கிய ஐஸூ
கார்த்திகை தீபம் சீரியல் : தொலைந்து போன தீபாவை தேடி அலையும் கார்த்திக்.. அருணாச்சலத்திடம் செம டோஸ் வாங்கிய ஐஸூ
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரியா கார்த்திக்கு போன் செய்து டீல் பேசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரியா கார்த்திக்கு போன் செய்து டீல் பேசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஒரு பக்கம் ரம்யா தீபாவை காணவில்லை என்று தேடுகிறாள். இன்னொரு பக்கம் அபிராமிக்கு ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டிருக்க அருண் ஐஸ்வர்யாவுக்கு போன் செய்து தீபா குறித்து விசாரிக்கிறான்.
Zee Tamil Karthigai deepam serial
தீபா வீட்டில் இல்ல, நான் மட்டும் தனியா தான் இருக்கேன் என்று அருணை வீட்டிற்கு கூப்பிட அவன் ஐஸ்வர்யாவை திட்டி போனை வைக்கிறான். அதன் பிறகு கார்த்திக் தீபாவை தேடி செல்லும் போது வழியில் மாணிக்கத்தை பார்க்கிறான், மாணிக்கம் ரம்யாவின் கம்பெனியில் வேலையை விட்டுட்டேன் என்று சொல்கிறான். மேலும் நீ எங்க போற என்று கேட்க கார்த்திக் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாத விஷயத்தையும் தீபா காணாமல் போன விஷயத்தையும் சொல்கிறான்.
இதையும் படியுங்கள்... ஜெயிலில் திடீரென உயிரிழந்த சூடாமணி... மர்ம மரணத்தின் பின்னணி என்ன? அண்ணா சீரியலில் அடுத்த ட்விஸ்ட்
Karthigai deepam serial Update
மாணிக்கம் நானும் வேலையில்லாமல் சும்மா தான் இருக்கேன். உனக்கு உதவியா உன்கூட வரேன் என்று சொல்ல, கார்த்திக் மாணிக்கத்துடன் மீனாட்சியை கடத்தி வைத்திருந்த ரவுடியை பார்க்க செல்கிறான். அந்த ரவுடியை பார்த்து மிரட்டி தீபா குறித்து விசாரிக்க நாங்க கடத்தல என்று உண்மையை சொல்கிறான். இதை தொடர்ந்து ஐஸ்வர்யா அருணாச்சலத்திற்காக விதவிதமாக சமைத்து கொடுத்து அசத்த, அவர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க கொத்து சாவியை கேட்க, அருணாச்சலம் மீனாட்சியிடம் இருந்து சாவியை வாங்கி தர, ஐஸ்வர்யா சந்தோசப்படுகிறாள். இறுதியாக இது கனவு என தெரிய வருகிறது.
Karthigai deepam serial Today Episode
இதை அப்படியே உண்மையாக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா அதே போல் விதவிதமாக சமைத்திருக்க, இதை பார்த்த அருணாச்சலம் உனக்கு அறிவு இல்லையா.. அபிராமி ஹாஸ்பிடலில் இருக்கா, அதுவும் இல்லாமல் இன்னைக்கு அமாவாசை அப்படி இருக்கும் போது அசைவம் சமைத்து இருக்க என்று ஆவேசப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... 'கல்வி விருது விழா' முடிந்த பின்னர்... யாரும் எதிர்பாராததை செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி!