- Home
- Gallery
- கார்த்திகை தீபம் சீரியல் : டீலுக்கு ஓகே சொல்லலைனா தீபாவை தூக்கிடுவேன்; மிரட்டும் ரியா... ஓகே சொல்வாரா கார்த்தி
கார்த்திகை தீபம் சீரியல் : டீலுக்கு ஓகே சொல்லலைனா தீபாவை தூக்கிடுவேன்; மிரட்டும் ரியா... ஓகே சொல்வாரா கார்த்தி
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா பரிகாரம் செய்ய தயாராகிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா பரிகாரம் செய்ய தயாராகிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ரியா என்கிட்ட ஒரு டைமண்ட் இருக்கு, மார்க்கெட்டில் எப்படியும் பல கோடிக்கு போகும் என்று சொல்ல, ராஜேஸ்வரி வாயை பிளக்கிறாள். அதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் வெளியே செல்லும் போது குறி சொல்லும் பெண் ஒருவரை பார்க்கின்றனர்.
zee Tamil Karthigai deepam serial
அவர் பக்கத்தில் சென்று உட்கார்ந்ததும் அந்த பெண் உங்க மனசுல எதோ ஒரு ஏக்கம் இருக்கு என்று சொன்னதும் இவர்கள் குறி கேட்க வந்திருப்பதாக சொல்கின்றனர். முதலில் ராஜேஸ்வரி இவ என் பொண்ணு, இவளோட மாமியார் ஹாஸ்பிடலில் இருக்காங்க, எப்போ சாவாங்க என்று கேட்க, அந்த பெண் அடுத்த அமாவாசைக்கும் செத்து போய்டுவாங்க என்று சொல்கிறாள். அடுத்து ஐஸ்வர்யா வீட்டு கொத்து சாவி எப்போ என்னுடைய கைக்கு கிடைக்கும் என்று கேட்க, அது கண்டிப்பா உ ன் கைக்கு கிடைக்கும், ஆனால் அதுக்கு நீ கொஞ்சம் கஷ்டப்படணும்.
இதையும் படியுங்கள்... கல்வி விருது விழாவில் பூவோடு வந்து புரபோஸ் பண்ணிய நண்பிகள்.. அன்போடு ஏற்றுக்கொண்ட விஜய்- வைரலாகும் Cute Photos
Karthigai deepam serial update
சுடுகாட்டில் ஒரு பூஜை செய்யணும், அப்படி செய்தா உன் மாமியார் செத்து போய்டுவாங்க, அதன் பிறகு ஆயுத பூஜை ஒன்னு செய்யணும் அதன் பிறகு கொத்து சாவி உன் கைக்கு வரும் என்று சொன்னதும் இருவரும் சந்தோசப்படுகின்றனர். அந்த குறி சொல்லும் பெண்மணியும் இவர்களிடம் இருந்து பணத்தை கறக்கிறாள். இதையடுத்து ரம்யா கோவிலுக்கு வர, அங்கு தீபா இல்லாததால் இவ எங்க போனா? இவளை போட்டு தள்ள பிளான் போட்டது நடக்குமா? நடக்காதா? என்று புலம்புகிறாள். மறுபக்கம் கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு வர செகண்ட் ஒப்பீனியன் கேட்க போய் இருந்தியே என்ன ஆச்சு என்று கேட்க, எல்லாரும் இதையே தான் சொல்றாங்க என்று வருத்தப்படுகிறான்.
Karthigai deepam serial Today Episode
அடுத்து ரியா சுரேஷ் போனில் இருந்து போன் செய்து ஆனந்திடம் சமாதானம் பேச, ஆனந்த் நீ சரண்டர் ஆகி தான் ஆகணும் என்று சொல்ல, ரியா நான் சரண்டர் ஆகிடுறேன். ஆனால் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும். நான் அந்த வீட்டு மருமகளாக வாழனும் என்று சொல்ல, ஆனந்த் முடியாது என்று மறுக்க, கார்த்திக்கிடம் போனை கொடுக்க சொல்லி என்னுடைய டீலுக்கு ஓகே சொல்லலைனா உன் பொண்டாட்டியை தூக்கிடுவேன் என்று மிரட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... சூடாமணி ஜெயில்லயே செத்துருவா... அடிச்சு சொல்லும் செளந்தரபாண்டி; கடுப்பான ஷண்முகம் - அண்ணா சீரியல் அப்டேட்