- Home
- Gallery
- கார்த்திகை தீபம் சீரியல் : நடு காட்டுக்குள் தீபாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. சீரியஸான அபிராமியின் உடல்நிலை
கார்த்திகை தீபம் சீரியல் : நடு காட்டுக்குள் தீபாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. சீரியஸான அபிராமியின் உடல்நிலை
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா சோப்பில் பீரோ சாவியை மறைத்து வைத்திருந்ததை அருண் பார்த்து விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா சோப்பில் பீரோ சாவியை அச்சு வைத்து மறைத்து வைத்திருந்ததை அருண் பார்த்து விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Zee Tamil Karthigai deepam serial
அதாவது, அபிராமியின் உடல்நிலை மோசமாகி விட, அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்குவதாக டாக்டர்கள் அதிர்ச்சி கொடுக்கின்றனர். இதனால் குடும்பத்தினர் எல்லோரும் கவலையடைகின்றனர். மறுபக்கம் தீபாவை தீர்த்துக் கட்ட ரம்யா ஏற்பாடு செய்திருந்த போலி சாமியார் பரிகாரம் செய்வதை பற்றி சொல்கிறார்.
இதையும் படியுங்கள்... அண்ணா சீரியல் : கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த செளந்தரபாண்டி... பாண்டியம்மாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன?
Karthigai deepam serial Update
இந்த நிலையில் நடுக் காட்டுக்குள் ஓடும் ஆற்றில் இதற்கான பரிகாரத்தை செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடந்துள்ளது. தீபா போலி சாமியார் சொன்னதையும் ரம்யாவின் நாடகத்தையும் உண்மை என நம்பி பரிகாரம் செய்ய வருகிறாள். ரம்யா மற்றும் போலி சாமியாரும் அவருடன் அங்கு செல்கின்றனர்.
Karthigai deepam serial Today Episode
இந்தப் பரிகாரத்தை தீபா செய்து முடித்தாரா? இல்லை ரம்யா தீபாவை தீர்த்துக் கட்டினாரா? அபிராமியின் உயிருக்கு என்ன ஆனது என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... ஒன்னில்ல; ரெண்டில்ல.. ஒரே நேரத்தில் 3 ஓடிடி தளங்களில் வெளியாகும் சூரியின் கருடன் திரைப்படம் - எப்போ ரிலீஸ்?