- Home
- Gallery
- நடிகர் இளவரசு மகன் திருமணம்.. கார்த்தி முதல் SK வரை படையெடுத்து வந்து வாழ்த்திய கோலிவுட் பிரபலங்களின் போட்டோஸ்
நடிகர் இளவரசு மகன் திருமணம்.. கார்த்தி முதல் SK வரை படையெடுத்து வந்து வாழ்த்திய கோலிவுட் பிரபலங்களின் போட்டோஸ்
தமிழ் திரையுலகில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் இளவரசுவின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ilavarasu son wedding Reception
தமிழ் திரையுலகில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் இளவரசு. இவர் நடிகராக மட்டுமின்றி ஒளிப்பதிவாளராகவும் தன்னுடைய முத்திரையை பதித்துள்ளார். பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான இளவரசு, அதன் பின்னர் சீமான் இயக்கிய பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை போன்ற திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் இதுவரை 13 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.
Sivakarthikeyan at ilavarasu son wedding Reception
இதையடுத்து சினிமாவில் நடிகராக காலடி எடுத்து வைத்த இளவரசு, ஆரம்பத்தில் பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை, வேதம் புதிது, கடலோர கவிதைகள் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அதன்பின்னர் களவானி, முத்துக்கு முத்தாக, கலகலப்பு, வீரம், சதுரங்க வேட்டை, பாபநாசம், சென்னை 28, கடைக்குட்டி சிங்கம், என்.ஜி.கே, டாக்டர், ஜெய் பீம் என பல்வேறு வெற்றிப்படங்களில் குணச்சித்திர நடிகராக கலக்கினார்.
இதையும் படியுங்கள்... கண்மணியை தொடர்ந்து கதீஜா உடன் ஜோடி... பாலிவுட்டில் காத்துவாக்குல ரெண்டு காதல் செய்யும் ஷாருக்கான்..!
karthi at ilavarasu son wedding Reception
சின்னத்திரையிலும் ஆனந்த ராகம் என்கிற சீரியலில் நடித்துள்ள இளவரசுவுக்கு பரதன் என்கிற மகன் இருக்கிறார். அவரின் திருமணம் அண்மையில் நடந்து முடிந்த நிலையில், மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஜீவன் ஜோதி மஹாலில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் படையெடுத்து வந்து மணமக்களை வாழ்த்தினர். குறிப்பாக கோலிவுட்டின் டாப் ஹீரோக்களாக இருக்கும் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் நேரில் வந்து வாழ்த்தினர்
Seeman at ilavarasu son wedding Reception
அதேபோல் நடிகர் இளவரசுவின் நெருங்கிய நண்பரான சீமான், நடிகர் சமுத்திரக்கனி உடன் வந்து திருமண வரவேற்பில் கலந்துகொண்டார். அதேபோல் தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவருமான பூச்சி முருகனும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Arjun Daughter : அர்ஜுனின் இளைய மகளை பார்த்திருக்கீங்களா? அக்கா திருமணத்தில் செம டான்ஸ் - வைரல் பிக்ஸ் இதோ!