JOB ALERT : சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்- உடனே விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் 11 ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களை நிரப்ப மாவட்ட நலச்சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை 12.09.2024 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சுகாதாரத்துறையில் வேலை
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் சிறப்பு முகாமை தமிழக அரசு வேலை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஒப்பந்த அடிப்பைடியில் பொது சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை மற்றும் தேசிய நலக்குழுமம் சார்பில், மாவட்ட நலச்சங்கம் (District Health Society) மூலம் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆட்சியர் அறிவிப்பு
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக 11 ஒப்பந்த பணியிடங்களை (National Tobacco Control Program-Social Worker-01. State Bureau of Health Intelligence-Data Entry Operator-01. National Program Health Care of Elderly-Physiotherapist-01,
காலிபணியிடம்
Labour MMU Driver-01. Labour MMU Cleaner- 01.Immunization-Vaccine Cold Chain Manager-01.Mid-Level Health Provider (MLHP)-02. Health Inspector Grade II (MPHW) (சுகாதார ஆய்வாளர் நிலை-II)-02) மற்றும் ஆதரவு ஊழியர் (Support Staff/Hospital Worker) பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
விண்ணப்பிக்க கடைசி நாள்
இப்பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவம் மற்றும் விவரங்கள் https://kancheepuram.nic.in இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்து என்ற சுயசான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் 12.09.2024 அன்றுமாலை 05.45 மணிக்குள். நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் /மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42A. இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம்- 631 501
அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்கள்.