- Home
- Gallery
- கல்கி 2898 ஏடி படத்தில் கமலுக்கு முதலில் இந்த லுக் தான் இருந்ததா? நல்லவேள ரிஜெக்ட் பண்ணிட்டாங்க..
கல்கி 2898 ஏடி படத்தில் கமலுக்கு முதலில் இந்த லுக் தான் இருந்ததா? நல்லவேள ரிஜெக்ட் பண்ணிட்டாங்க..
கல்கி 2898 ஏடி படத்தில் கமலின் யாஸ்கின் கேரக்டருக்கான ரிஜெக்டட் லுக் தொடர்பான போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Yaskin Kalki 2898 AD
சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தில் கமல்ஹாசன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சுப்ரீம் லீடர் யாஸ்கின் என்ற நெகட்டிவ் ரோலில் கமலின் நடிப்பும் தோற்றமும் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி உள்ளது. கல்கி 2898 ஏடி படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே கமலின் தோற்றம் அனைவரையும் மிரள வைத்தது என்றே சொல்ல வேண்டும்
படத்தில் ஓரிரு காட்சிகளே வந்தாலும் கமலின் கேரக்டர் சக்திவாய்ந்த கேரக்டராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் திரையில் தோன்றும் நேரம் குறைவாக இருந்தாலும் அடுத்த பாகத்தில் கமல் தொடர்பான காட்சிகள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படம் முழுக்க வரும் காட்சிகளில் மிகவும் மெலிதான தோற்றத்தில் பல இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் நபராக கமல் தோன்றி இருப்பார். எனினும் படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சியில் சுமதியின் (தீபிகா படுகோன்) கருவில் இருந்து எடுக்கப்பட்ட சீரத்தை தன் உடலில் செலுத்திய பிறகு ஆஜானுபாகுவாக கமல் மாறிவிடுவார்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் யாஸ்கின் கேரக்டருக்கு இயக்குனர் நாக் அஸ்வின் வேறொரு தோற்றத்தை வைத்து டெஸ்ட் செய்தாராம். எனினும் ஒரு சில காரணங்களால் பின்னர் அந்த லுக்கை அவர் ரிஜெக்ட் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. கமலின் யாஸ்கின் கேரக்டருக்கான ரிஜெக்டட் லுக் தொடர்பான போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சிலர் நல்லவேள இந்த லுக்கை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க என்று பதிவிட்டு வருகின்றனர்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி உள்ள கல்கி 2898 ஏடி படம் உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறது. 600 கோடி என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் மற்றும் திஷா பதானி என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்து வருகிறது.
கல்கி 2898 ஏடி படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகள், சுவாரஸ்யமான கதை ஆகியவை ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இதனால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை இப்படம் 700 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விரைவில் இந்த படம் 1000 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாபாரதப் போருக்கு 6000 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்காலத்தில் நடக்கும் இந்த கதையில், பிரபாஸ் பைரவா என்ற ரோலிலும், தீபிகா படுகோன், SUM-80 என அழைக்கப்படும் சுமதி என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
அமிதாப் பச்சன் மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமாவாகவும், கமல்ஹாசன் யாஸ்கின் என்ற சுப்ரீம் லீடராகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் மிருணால் தாக்கூர், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, எஸ்.எஸ். ராஜமௌலி, ராம் கோபால் வர்மா என பலர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.