- Home
- Gallery
- ஆண்டவர் அப்போவே அப்படி... ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் கமலின் விண்டேஜ் கிளிக்ஸ் ஒரு பார்வை
ஆண்டவர் அப்போவே அப்படி... ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் கமலின் விண்டேஜ் கிளிக்ஸ் ஒரு பார்வை
நடிகர் கமல்ஹாசன் சிறுவயது முதல் வாலிப வயது வரை எடுத்துக்கொண்ட பலரும் பார்த்திராத அரிய புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

kamalhaasan
கமல்ஹாசன் தன்னுடைய சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். இதனால் தான் அவரின் நடிப்புக்கும் அவருக்கு இருக்கும் அனுபவத்துக்கும் நிகராக எவராலும் வரமுடியவில்லை. அப்படி சிறுவயதில் நடித்தபோது அவர் எடுத்த கேண்டிட் புகைப்படம் தான் இது.
kamalhaasan with balachander and rajini
சினிமாவில் கமல், ரஜினி என இரு நடிகர்கள் கோலோச்சி இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர்களை வைத்து இயக்கிய இயக்குனர்கள் தான். அதிலும் கமல், ரஜினி இருவரையும் படத்துக்கு படம் செதுக்கி அவர்களை அடுத்தடுத்த கட்டத்திற்கு உயர்த்திய பெருமை பாலச்சந்தரையே சேரும். அவருடன் இருவரும் எடுத்த புகைப்படம் இது.
kamalhaasan, Rajinikanth
1980களில் பெல் பாட்டம் பேண்ட்டுகள் மிகவும் பிரபலம். அந்த வகை பேண்ட்டுகளை அணிந்து ரஜினி, கமல் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.
kamalhaasan ex wife vani ganapathy
நடிகர் கமல்ஹாசன் மனைவி என்றால் பலருக்கும் சரிகாவை தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் சரிகாவுக்கு முன்னரே வாணி கணபதி என்பவரை திருமணம் செய்துகொண்டார் கமல், அப்போது எடுத்த புகைப்படம் இது.
இதையும் படியுங்கள்.... 90-களில் தல தளபதியை சம்பளத்தில் மிஞ்சிய நடிகர் பிரசாந்த் சொத்து மதிப்பு எவ்வளவு?
kamalhaasan family
கமல்ஹாசன் பரமக்குடியில் பிறந்தவர். அவர் தனது குடும்பத்தினருடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட விண்டேஜ் கிளிக் இது.
kamalhaasan work out photo
தற்போது இந்தியன் 2 படத்தில் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் காட்சியளிக்கும் கமல், இளம் வயதிலும் பிட்னஸ் பிரீக்காக இருந்துள்ளார். அப்போது ஒர்க் அவுட் செய்தபோது எடுத்த புகைப்படம் இது.
kamalhaasan rare unseen photos
சினிமா நட்சத்திரங்கள் என்றாலே இன்றைய காலகட்டத்தில் போட்டோஷூட்டுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் கமல் அந்த காலகட்டத்திலேயே ஜிம்மில் கூலாக நடத்திய போட்டோஷூட் புகைப்படம் இது.
இதையும் படியுங்கள்.... தில்லாக மோதி இந்தியன் 2வை பதம் பார்த்த பார்த்திபனின் டீன்ஸ்.. வேறலெவல் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு