- Home
- Gallery
- இந்தியன் 2 மட்டுமில்ல இந்தியன் 3 ரிலீஸ் தேதியும் வந்தாச்சு... அஜித் படத்துடன் ஒத்தைக்கு ஒத்தையாக மோத முடிவு
இந்தியன் 2 மட்டுமில்ல இந்தியன் 3 ரிலீஸ் தேதியும் வந்தாச்சு... அஜித் படத்துடன் ஒத்தைக்கு ஒத்தையாக மோத முடிவு
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் மூன்றாம் பாகம் குறித்த அப்டேட்டும் வந்துள்ளது.

Indian 2
நடிகர் கமல்ஹாசன் - இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் முதன்முதலில் உருவான திரைப்படம் தான் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தியன் படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கின்றது.
kamal, shankar
இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் முதல் பாடல் மே 22-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. இப்படத்தை வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி திரைக்கு கொண்டுவர உள்ளதாக படக்குழுவே அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
இதையும் படியுங்கள்... Anikha: தவறாக தொடுவாங்க... டார்ச்சர் பண்ணுவாங்க! நான் அம்மா கூடவே தான் இருப்பேன்! போல்டாக பேசிய அனிகா!
Indian 3 release date
அதுமட்டுமின்றி அண்மையில் இந்தியன் 2 படத்தின் புரமோஷனுக்காக பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் தமிழ் வர்ணனையின் போது கலந்துகொண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் அப்படம் குறித்த பல்வேறு அப்டேட்டுகளையும் வெளியிட்டனர். அதில் ஒன்று தான் இந்தியன் 3 திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட். அதன்படி இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆன 6 மாதத்தில் இந்தியன் 3 திரைப்படம் வெளியிடப்படும் என அறிவித்தனர்.
Good Bad ugly
அந்த வகையில் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ந் தேதி ரிலீஸ் ஆவதால், அதிலிருந்து 6 மாதம் கழித்து ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக இந்தியன் 3 திரைப்படம் திரைக்கு வர அதிகளவு வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளதால், அப்படத்துக்கு போட்டியாக இந்தியன் 3 திரைப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... Vadivelu : குக் வித் கோமாளியை காலி பண்ண டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் அதிரடியாக களமிறக்கப்பட்ட வடிவேலு