- Home
- Gallery
- ஏப்ரல் 2024.. சரியான நேரத்தை குறிவைக்கும் டாப் ஹீரோஸ் - கமல் மற்றும் சூர்யாவுடன் மல்லுக்கட்ட தயாரான தனுஷ்!
ஏப்ரல் 2024.. சரியான நேரத்தை குறிவைக்கும் டாப் ஹீரோஸ் - கமல் மற்றும் சூர்யாவுடன் மல்லுக்கட்ட தயாரான தனுஷ்!
Big Movies Release : பல முன்னணி நடிகர்களின் படங்கள் வருகின்ற 2024ம் ஆண்டு வெளியாகவுள்ளது, குறிப்பாக பல ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியன் படத்தின் 2ம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

Indian 2
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் இந்தியன் 2 திரைப்படம் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரபல நடிகர் சூர்யா நடித்துவரும் கங்குவா உள்ளிட்ட இரு படங்கள் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஏப்ரல் 11ம் தேதி ஈகைப் பெருநாள் வரும் நிலையில், அதனை தொடர்ந்து தமிழ் புத்தாண்டு மற்றும் பெரிய அளவிலான வார இறுதி நாட்கள் என்று விடுமுறைகள் பல வருவதால் பட தயாரிப்பு நிறுவனங்கள் ஏப்ரல் 11 மற்றும் 12ஆம் தேதிகளை குறி வைத்து தங்களுடைய படங்களை வெளியிட காத்துக் கொண்டிருக்கின்றன.
Kanguva
இந்நிலையில் உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் இந்தியன் 2 மற்றும் சூர்யாவின் கங்குவா ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஏப்ரல் 11 அல்லது 12 ஆம் தேதி இந்த இரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது தனுஷ் இயக்கி வரும் அவருடைய ஐம்பதாவது திரைப்படமும் அந்த இரு நாட்களில் ஒரு நாளில் வெளியாகிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Dhanush D50
தற்போது D50 படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் விறுவிறுப்பாக படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கி உள்ளதாகவும், ஏப்ரல் மாதத்திற்குள் அந்த பணிகளை முடித்து எதிர்வரும் 20204 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 அல்லது 12ஆம் தேதி உலகநாயகன் மற்றும் சூர்யா ஆகிய இருவருடன் களத்தில் தனுஷ் அவர்களும் இறங்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.