- Home
- Gallery
- Indian 2 - Shooting: இந்தியன் 2 படம் பற்றி புது அப்டேட் கொடுத்த கமல்...எப்போது படப்பிடிப்பு தெரியுமா..?
Indian 2 - Shooting: இந்தியன் 2 படம் பற்றி புது அப்டேட் கொடுத்த கமல்...எப்போது படப்பிடிப்பு தெரியுமா..?
Indian 2 - Shooting-: இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிச்சயம் மீண்டும் தொடரும், என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

indian 2
கமல் மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் கூட்டணியில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த படத்தில் கமலுடன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில், கஸ்தூரி என பலர் நடித்திருந்தனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
indian 2
இந்நிலையில், சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது லைக்கா நிறுவனம் சார்பில் தயாராகி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்தாண்டு முடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு காரணங்களால் தடைபட்டு இருக்கிறது. இயக்குநர் சங்கர் மற்றும் கமல் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை லைக்காவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது.
indian-2
தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து, மீண்டும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. விவேக் இந்தப் படத்தில் நடித்திருந்தார். இது குறித்து சமீபத்தில் மனம் திறந்த கமல், இந்தியன் 2 படத்திற்கு ரசிகர்களை விட இயக்குநர் சங்கமும், நானும் ஆர்வத்துடன் இருக்கிறோம். இயக்குநர் சங்கரின் ராம் சரண் கூட்டணியில் உருவாகும் 'RC 15' திரைப்படத்தின் பணிகள் முடிந்ததும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடரும்'' என்று கூறியுள்ளார்.