- Home
- Gallery
- Vikram: கமலின் விக்ரம் படத்தின் முழு கதையும் இதுதானாம்!முதல் முறையாக கசிந்த தகவலால்...அதிர்ச்சியில் படக்குழு!
Vikram: கமலின் விக்ரம் படத்தின் முழு கதையும் இதுதானாம்!முதல் முறையாக கசிந்த தகவலால்...அதிர்ச்சியில் படக்குழு!
Vikram Story: கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வருகிற ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியாக இருந்த விக்ரம் படத்தின் கதை கசிந்துள்ளது.

vikram movie
மாநகரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உயர்ந்தார். இதையடுத்து விஜய்யின் மாஸ்டர், கார்த்தியின் கைதி என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தார்.
vikram movie
இதையடுத்து, தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமலுடன் சேர்ந்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை அவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
vikram movie
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் என இரு முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
vikram
விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகளுடன் ரிலீசுக்கு தயாராக உள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம், வருகிற ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியாகிறது.
vikram movie
பான் இந்தியா படமாக வெளியாக திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கதை இதுதான் என்பது போல் தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
vikram movie
சிறையில் இருக்கும் விஜய் சேதுபதியை வெளியே கொண்டு வரும் அசைன்மென்ட் பகத் பாசிலும் கொடுக்கப்படுகிறது. அதன்படி, அவரும் ஒரு குற்றம் செய்து விட்டு சிறைக்கு செல்கிறார்.இவர்களின் தில்லாலங்கடி வேலைகளை முறியடிக்க கமல் சிறை செல்கிறார்.
vikram movie
இப்படியே முக்கால் வாசி கதை சிறையில் தானம். இறுதியில் என்ன நடந்தது என்பது தான் விக்ரம் படத்தின் முழு கதை என்று கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் திரையில் வர உள்ளதால் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்குமாம்.